100 அடியை நோக்கி மேட்டூர் அணை நீர்மட்டம்!

salem district mettur dam water level

சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடியை நெருங்கியது.

தொடர் நீர்வரத்தால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 99.80 அடியாகவும், நீர் இருப்பு 64.58 டி.எம்.சி.யாகவும் இருக்கிறது. தொடர் மழையால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 6,512 கனஅடியில் இருந்து 8,111 கனஅடியாக அதிகரித்துள்ளது. அதேபோல் பாசனத்திற்காக அணையில் இருந்து டெல்டாவுக்கு வினாடிக்கு 500, கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய்க்கு 250 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் காவிரி நீர்வரத்து வினாடிக்கு 6,500 கனஅடியில் இருந்து 8,500 கனஅடியாக உயர்ந்துள்ளது.

Mettur Dam Salem water level
இதையும் படியுங்கள்
Subscribe