salem district mettur dam water level

Advertisment

சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 9,500 கனஅடியில் இருந்து 10,500 கனஅடியாக அதிகரித்துள்ளது. அதேபோல் அணையில் உபரிநீர் திறப்பும் வினாடிக்கு 9,000 கன அடியில் இருந்து 11,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அணையின் கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்காக வினாடிக்கு 400 கனஅடி நீர் வெளியேற்றம். மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 அடியாகவும், நீர் இருப்பு 93.47 டி.எம்.சி ஆக இருக்கிறது.