/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/mettur dam2222 (1)_7.jpg)
'
சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
இன்று (17/09/2020) காலை நிலவரப்படி, மேட்டூர் அணைக்கான நீர்வரத்து விநாடிக்கு 12,894 கனஅடியில் இருந்து 14,458 கனஅடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 91.67 அடியாகவும், நீர்இருப்பு 54.58 டி.எம்.சி.யாகவும் இருக்கிறது. காவிரி டெல்டா பாசனத்துக்கு விநாடிக்கு 15,000 கனஅடி; கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்துக்கு விநாடிக்கு 700 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.
இதனிடையே, தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு காவிரி நீர்வரத்து விநாடிக்கு 16,000 கனஅடியிலிருந்து 13,000 கனஅடியாக குறைந்துள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)