மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு!

salem district mettur dam water level

சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரித்துள்ளது.

இன்று (02/09/2020) காலை நிலவரப்படி, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 5,075 கன அடியில் இருந்து 6,522 கன அடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 89.01 அடியாகவும், நீர் இருப்பு 51.52 டி.எம்.சி.யாகவும் இருக்கிறது. டெல்டா பாசனத் தேவைக்காக காவிரியில் 16,000 கன அடி, கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்கு 800 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

Mettur Dam Salem water level raised
இதையும் படியுங்கள்
Subscribe