Advertisment
சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணையின் நீர்மட்டம் 115.45 அடியில் இருந்து 114.89 அடியாக குறைந்தது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1,063 கனஅடியாக உள்ளது, அதேபோல் அணையில் இருந்து பாசனத்திற்கு நீர்திறப்பு 10,000 கனஅடியாக இருக்கிறது. மேலும் கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்காக அணையில் இருந்து வினாடிக்கு 600 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி அணையின் நீர் இருப்பு 85.55 டி.எம்.சியாக உள்ளது.