Advertisment
சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணையின் நீர்மட்டம் 116.01 அடியில் இருந்து 115.45 அடியாகக் குறைந்தது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1040 கனஅடியாக உள்ளது. மேலும் அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்கு 10,000 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. அதேபோல் கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்கு அணையில் இருந்து வினாடிக்கு 600 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. தற்போதைய நிலவரப்படி அணையின் நீர் இருப்பு 86.39 டி. எம்.சியாக இருக்கிறது.