Skip to main content

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு!

Published on 04/12/2019 | Edited on 04/12/2019

தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மேட்டூர் அணை, பவானி சாகர் அணை, பேச்சிப்பாறை அணை, உள்ளிட்ட பல்வேறு அணைகளும், மதுராந்தகம், வீராணம் உள்ளிட்ட பல ஏரிகளும் வேகமாக நிரம்பி வருகின்றது. 

SALEM DISTRICT METTUR DAM WATER LEVEL


அதன் தொடர்ச்சியாக சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 7,500 கனஅடியில் இருந்து 8,500 கனஅடியாக அதிகரித்துள்ளது. இதனால் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 8,000 கனஅடி நீர் திறந்து விடப்படுகிறது. மேலும் அணையில் இருந்து கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்காக வினாடிக்கு 400 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 அடியாக உள்ள நிலையில் நீர் இருப்பு 93.47 டி.எம்.சியாக இருக்கிறது. 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மூட்டை மூட்டையாக குட்கா பதுக்கல்; கிடங்கு உரிமையாளர் உள்பட 5 பேர் கைது

Published on 13/10/2022 | Edited on 13/10/2022

 

 

Hoarding bundles of gutka; 5 people including warehouse owner arrested!


சேலத்தில் மூட்டை மூட்டையாக குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களை கிடங்கில் ரகசியமாகப் பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்ததாக கிடங்கு உரிமையாளர் உள்ளிட்ட 5 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

 

சேலம் அன்னதானப்பட்டி மூலைப்பிள்ளையார் கோயில் அருகே, தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, ஹான்ஸ், பான்பராக் உள்ளிட்ட புகையிலை பொருட்களை பதுக்கி, விற்பனை செய்து வருவதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 

 

அதன்பேரில், அன்னதானப்பட்டி காவல்நிலைய காவல்துறையினர், அதே பகுதியைச் சேர்ந்த அன்பழகன் என்பவருக்குச் சொந்தமான ஒரு கிடங்கில் சோதனை செய்தனர். அந்த கிடங்கில் மூட்டை மூட்டையாக குட்கா பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது. அங்கிருந்து மொத்தம் 30 மூட்டைகளில் குட்காவை காவல்துறையினர் கைப்பற்றினர். அவற்றின் மொத்த மதிப்பு 5 லட்சம் ரூபாய். 

 

புகையிலை பொருட்களை கடை கடைக்கு ரகசியமாக விற்பனை செய்வதற்காக பயன்படுத்தப்பட்டு வந்த கார், மோட்டார் சைக்கிள் ஆகியவற்றையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். 

 

இது தொடர்பாக செவ்வாய்பேட்டையைச் சேர்ந்த ஹிதீஷ்குமார் (வயது 29), சரவணக்குமார் (வயது 28), வர்ஜிங்ராங் (வயது 24) மற்றும் 17 வயது சிறுவன், கிடங்கு உரிமையாளர் அன்பழகன் (வயது 51) ஆகிய ஐந்து பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர். 

 

அவர்களை சேலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பிறகு, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். 

 

Next Story

“வீடியோவை சமூக வலைத்தளங்களில் பரப்புவேன்”… சொத்துக்காக மனைவியை மிரட்டிய கணவன்

Published on 24/09/2022 | Edited on 24/09/2022

 

HUSBAND AND WIFE INCIDENT SALEM DISTRICT AMMAPET POLICE STATION

 

சேலத்தில், பெற்றோரிடம் இருந்து சொத்துகளை எழுதி வாங்கி வராவிட்டால் குளிக்கும்போது எடுத்த வீடியோ காட்சிகளை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து விடுவேன் என்று மிரட்டல் விடுத்த கணவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

சேலம் அம்மாபேட்டை எஸ்.கே.டவுன்ஷிப் பகுதியைச் சேர்ந்தவர் சஹானா (வயது 29). இவருக்கும் கோரிமேட்டைச் சேர்ந்த ஜெயபிரகாஷ் என்பவருக்கும் கடந்த 2017- ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. 

 

திருமணத்தின்போது வரதட்சணையாக 100 பவுன் நகைகள் போடப்பட்டுள்ளன. இந்நிலையில் சஹானா, அம்மாபேட்டை மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரில், ''எனது கணவர் சவுந்தர்யா என்ற பெண்ணை எனக்குத் தெரியாமல் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். 

 

என்னுடைய நகைகள் அனைத்தையும் கணவரும், உறவினர் சகுந்தலாவும் அடமானம் வைத்துள்ளனர். ஜெயபிரகாஷ், சகுந்தலா, சவுந்தர்யா, ஞானசேகரன் என்கிற கேபிள் பாபு, தீபக், சீனிவாசன் ஆகியோர் என்னுடைய தந்தையிடம் இருக்கும் சொத்தை எல்லாம் எழுதி வாங்கி வரும்படி மிரட்டுகின்றனர். 

 

சொத்துகளை வாங்கி வராவிட்டால் நான் குளிக்கும்போது ரகசியமாக எடுத்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் பரப்புவோம் என்றும் மிரட்டி வருகிறார். என் கணவர் உள்ளிட்டோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்று தெரிவித்துள்ளார். 

 

அதன்பேரில் ஜெயபிரகாஷ், சவுந்தர்யா, சகுந்தலா, ஞானசேகரன் என்கிற கேபிள் பாபு, தீபக், சீனிவாசன் ஆகிய 6 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.