salem district, mettru dam water level

சேலம் மாவட்டம், மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது.

Advertisment

இன்று (18/09/2020) காலை நிலவரப்படி, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 14,458 கனஅடியில் இருந்து 13,001 கனஅடியாக குறைந்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 91.35 அடியாகவும், நீர்இருப்பு 54.20 டி.எம்.சி.யாகவும் இருக்கிறது. மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசன தேவைக்கான நீர்திறப்பு 15,000லிருந்து 18,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேபோல்கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்காகவிநாடிக்கு 700 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.

Advertisment

இதனிடையே, காவிரி ஆற்றில் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து விநாடிக்கு 13,000 கனஅடியில் இருந்து 12,000 கனஅடியாக குறைந்தது.