salem district lok sabha member s.r.parthiban coronavirus hospital

தமிழகத்தில் கரோனா தொற்று படிப்படியாக கட்டுக்குள் வந்துள்ளது. இருப்பினும் நீரிழிவு, ரத்த அழுத்தம், இருதயம் பாதிப்பு, டிபி உள்ளிட்ட வேறு சில உடல்நலப் பிரச்சனைகள் உள்ளவர்களைக் கரோனா வைரஸ் எளிதாக தாக்குகிறது.

Advertisment

இந்நிலையில், சேலம் தி.மு.க. எம்.பி., எஸ்.ஆர்.பார்த்திபனும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. அவருக்குத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து, தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Advertisment

கடந்த ஒரு மாதமாக சட்டமன்ற தேர்தல் பரப்புரை பணிகள் தொடர்பாக தொடர்ந்து பல்வேறு கூட்டங்களை நடத்தி வந்தார் எஸ்.ஆர்.பார்த்திபன். மக்களுடன் நெருக்கமாக சென்று பரப்புரை மேற்கொண்டார். அதனால் அவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதையடுத்து அவருடைய குடும்பத்தினருக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.