Advertisment

ஊரடங்கில் மேலும் தளர்வு; சேலத்தில் இன்று முதல் என்னென்ன கடைகளைத் திறக்கலாம்?

salem district lockdown shops open district collector announced

சேலம் மாவட்டத்தில் கரோனா ஊரடங்கால் ஒன்றரை மாதமாக மூடப்பட்டிருந்த கடைகளில் சிலவற்றுக்கு விலக்கு அளிக்கப்பட்டு உள்ள நிலையில், திங்கள் கிழமை (மே 11- ஆம் தேதி) முதல் என்னென்ன கடைகளைத் திறக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ராமன் தெரிவித்துள்ளார்.

Advertisment

ஆட்சியர் அறிவிப்பின்படி சேலம் மாவட்டத்தில் பின்வரும் கடைகளை இன்றுமுதல் (மே 11) குறிப்பிட்ட நேரத்தில் திறக்க அனுமதிக்கப்படுகிறது. அதன் விவரம்:

Advertisment

1. தேநீர் கடைகள் (பார்சல் மட்டும்)

2. பேக்கரி கடைகள் (பார்சல் மட்டும்)

3. உணவகங்கள் (பார்சல் மட்டும்)

4. பூ, பழம், காய்கறி மற்றும் பலசரக்கு கடைகள்

5. கட்டுமானப் பொருள்கள் விற்கும் கடைகள்

6. சிமெண்ட், ஹார்டுவேர், சானிடரிவேர் விற்கும் கடைகள்

7. மின்சாதனப் பொருள்கள் மற்றும் பழுது நீக்கும் கடைகள்

8. மொபைல் போன் விற்கும் கடைகள் மற்றும் பழுது நீக்கும் கடைகள்

9. கணினி விற்பனை மற்றும் பழுது நீக்கும் கடைகள்

10. வீட்டு உபயோக இயந்திரங்கள் மற்றும் வீட்டு உபயோக பொருள்கள் விற்கும் கடைகள்

11. மோட்டார் இயந்திரங்கள் மற்றும் பழுது நீக்கும் கடைகள்

12. கண் கண்ணாடி மற்றும் பழுது நீக்கும் கடைகள்

13. சிறிய நகைக்கடைகள் (ஏசி வசதி இல்லாதவை)

14. சிறிய ஜவுளிக்கடைகள் (ஏசி வசதி இல்லாதவை) (ஊரக பகுதிகளில் மட்டும்)

15. மிக்ஸி, கிரைண்டர் பழுது நீக்கும் கடைகள்

16. டிவி விற்பனை மற்றும் டிவி பழுது நீக்கும் கடைகள்

17. பெட்டிக்கடைகள்

18. பர்னிச்சர் கடைகள்

19. சாலையோர தள்ளுவண்டிக் கடைகள்

20. உலர் சலவையகங்கள்

21. கூரியர் மற்றும் பார்சல் சர்வீஸ்

22. லாரி புக்கிங் சேவைகள்

23. ஜெராக்ஸ் கடைகள்

24. இரண்டு சக்கர, நான்கு சக்கர வாகன விற்பனை நிலையங்கள்

25. இரண்டு சக்கர, நான்கு சக்கர வாகன பழுது நீக்கும் பட்டறைகள்

26. நாட்டு மருந்து விற்பனை கடைகள்

27. விவசாய இடுபொருள்கள் மற்றும் பூச்சி மருந்து விற்பனை கடைகள்

28. டைல்ஸ் கடைகள்

29. பெயிண்ட் கடைகள்

30. எலக்ட்ரிகல் கடைகள்

31. ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள் விற்பனை கடைகள்

32. நர்சரி கார்டன்கள்

33. மரக்டைகள் மற்றும் பிளைவுட் கடைகள்

34. மரம் அறுக்கும் கடைகள்

முடி திருத்தும் நிலையங்கள், ஸ்பா மற்றும் அழகு நிலையங்கள் இயங்க அனுமதி இல்லை.

காய்கறிகள், மளிகைப்பொருள்கள் விற்பனை செய்யும் கடைகள் மற்றும் நோய்க்கட்டுப்பாட்டுப் பகுதிகள் தவிர மற்ற கடைகள், அனைத்துப் பகுதிகளிலும் காலை 06.00 மணி முதல் இரவு 07.00 மணி வரை செயல்படலாம். பிற தனிக்கடைகள் காலை 10.00 மணி முதல் இரவு 07.00 மணி வரை செயல்படலாம்.

சேலம் மாவட்டத்தில் நோய்க்கட்டுப்பாட்டுப் பகுதிகள் தவிர அனைத்துப் பகுதிகளிலும் உள்ள தேநீர் கடைகள் காலை 06.00 மணி முதல் இரவு 07.00 மணி வரை பார்சல் சேவைக்கு மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. தேநீர் கடைகளில் சமூக இடைவெளியைக் கண்டிப்பாகக் கடைப்பிடிக்க வேண்டும். மேலும், தினமும் 5 முறை கிருமிநாசினி தெளித்து, கடையைச் சுகாதாரமாக வைத்துக் கொள்ள வேண்டும். தேநீர் கடைகளில் வாடிக்கையாளர்கள் நின்றோ, அமர்ந்தோ உட்கொள்ள அனுமதி இல்லை. இதை முறையாகக் கடைப்பிடிக்க தவறும் தேநீர் கடைகள் உடனடியாக மூடப்படும்.

சேலம் மாவட்டத்தில் நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதிகள் தவிர அனைத்துப் பகுதிகளிலும் உள்ள பெட்ரோல் பங்க்குகள் காலை 06.00 மணி முதல் இரவு 08.00 மணி வரை செயல்படலாம். தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள பெட்ரோல் பங்க்குகள் 24 மணி நேரமும் செயல்பட அனுமதிக்கப்பட்டு உள்ளது.

சேலம் மாவட்டத்தில் நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதிகள் தவிர அனைத்துப் பகுதிகளிலும் உள்ள அனைத்து தனியார் நிறுவனங்கள் 33 சதவீத பணியாளர்களுடன் காலை 10.00 மணி முதல் இரவு 07.00 மணி வரை செயல்படலாம்.

http://onelink.to/nknapp

தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளபடி, மேற்குறிப்பிட்டுள்ள நிறுவனங்கள் மற்றும் கடைகளில் தனிநபர் இடைவெளியைப் பின்பற்றி, சமூக விலகலைக் கடைப்பிடிக்க வேண்டும். அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். போதுமான கிருமிநாசினிகளைப் பயன்படுத்துவதோடு, பணியாளர்கள், தொழிலாளர்கள் பாதுகாப்பாகப் பணியாற்றுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அந்தந்த நிறுவனங்கள் மற்றும் கடைகளின் உரிமையாளர்களே மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. மேலும், தமிழக அரசால் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட அனைத்துத் தளர்வுகளும், தடைகளும் மறு உத்தரவு வரும் வரை தொடர்ந்து சேலம் மாவட்டத்தில் முழுமையாகக் கடைப்பிடிக்கப்படும்.

சேலம் மாவட்டத்தில் நோய்க்கட்டுப்பாட்டுப் பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ள சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட கிச்சிப்பாளையம் 34- வது வார்டு, குகை 46- வது வார்டு, தாதகாப்பட்டி 58- வது வார்டு ஆகிய மூன்று பகுதிகளிலும், மேட்டூர் நகராட்சியில் 7- வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகள், தலைவாசல் ஒன்றியத்திற்கு உட்பட்ட நவக்குறிச்சி, பெத்தநாயக்கன்பாளையம் அருகே உள்ள கருமந்துறை வடக்கநாடு, ஓமலூர் அருகே உள்ள கோட்டகவுண்டம்பட்டி, கெங்கவல்லி அருகே உள்ள ஓலைப்பட்டி ஆகிய ஆறு நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளிலும் எவ்வித கடைகளோ, நிறுவனங்களோ இயங்க அனுமதி இல்லை.

இவ்வாறு சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன் தெரிவித்துள்ளார்.

shops lockdown District Collector Salem
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe