கரோனா நோய்த்தொற்று பரவல் அபாயம் காரணமாக தமிழகம் முழுவதும் மார்ச் 24- ஆம் மாலை முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. அதன்பிறகு மே 17- ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. தற்போது மே 31- ஆம் தேதி வரை மீண்டும் நீட்டிக்கப்பட்டு உள்ளது.
window.googletag = window.googletag || {cmd: []};
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/nk_desktop_ap_display_mr_p4', [300, 250], 'div-gpt-ad-1584956702125-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.enableServices();
});
window.googletag = window.googletag || {cmd: []};
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/nk_mobile_ap_display_mr_p2', [300, 250], 'div-gpt-ad-1584957496255-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.enableServices();
});
எனினும், குறிப்பிட்ட நிபந்தனைகளின் அடிப்படையில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளும் அளிக்கப்பட்டு உள்ளன. இத்தடை உத்தரவு காலத்தில் பொதுவெளியில் 5 அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் ஒன்றாகக் கூடுவதும், பொது இடத்தில் நடமாடுவதும் தடை செய்யப்பட்டு உள்ளது. அத்தியாவசியத் தேவைகள், அரசு வழங்கியுள்ள விதிமுறைகள், தளர்வுகளால் இயக்கப்படும் தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் பணியாற்றுபவர்கள் மட்டுமே வெளியில் வரலாம். இந்த உத்தரவை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
ஊரடங்கு உத்தரவு தற்போது மே 31- ஆம் தேதி நள்ளிரவு 12.00 மணி வரை நீட்டிக்கப்பட்டு உள்ள நிலையில், ஏற்கனவே நடைமுறையில் உள்ள செயல்பாடுகளுக்கான தடைகள், மறு உத்தரவு வரும் வரை தொடர்ந்து அமலில் இருக்கும்.
தடை உத்தரவு பொருந்தும் நிறுவனங்கள், கடைகள் விவரம்:
பள்ளிகள், கல்லூரிகள், பயிற்சி நிறுவனங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் அனைத்துக் கல்வி நிறுவனங்கள் எக்காரணம் கொண்டும் திறக்கப்படக் கூடாது. வழிபாட்டுத் தலங்கள், பொதுமக்கள் வழிபாடு மற்றும் அனைத்து மதம் சார்ந்த கூட்டங்கள் நடத்தக்கூடாது.
பொதுமக்கள் அதிகளவில் கூடும் திரையரங்குகள், கேளிக்கை கூடங்கள், மதுக்கூடங்கள், உடற்பயிற்சிக் கூடங்கள், கடற்கரை, சுற்றுலாத் தலங்கள், உயிரியல் பூங்காக்கள், அருங்காட்சியகங்கள், நீச்சள் குளங்கள், விளையாட்டு அரங்குகள், பெரிய அரங்குகள், கூட்ட அரங்குகள் செயல்படத் தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டு உள்ளது. அனைத்து வகையான சமய, சமுதாயக் கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்களுக்கு தடை நீடிக்கிறது.
பொதுமக்களுக்கான விமானம், ரயில், பேருந்து போக்குவரத்து, மாநிலங்களுக்கு இடையேயான ரயில் போக்குவரத்து, சென்னை மாநகரில் இருந்து பிற பகுதிளுக்கான ரயில் போக்குவரத்து ஆகியவற்றுக்கு அனுமதி கிடையாது. மத்திய, மாநில அரசுகளின் சிறப்பு அனுமதி பெற்று இயக்கப்படும் விமானம், ரயில், பொதுப் போக்குவரத்து மட்டும் அனுமதிக்கப்படும்.
டாக்ஸி, ஆட்டோ, சைக்கிள் ரிக்ஷா, மின்சார ரயில்கள் இயக்கத் தடை விதிக்கப்பட்டு உள்ளது. தங்கும் விடுதிகள் (பணியாளர் விடுதிகளைத் தவிர), தங்கும் ஹோட்டல்கள், ரிசார்ட்டுகள் ஆகியவற்றைத் திறக்க அனுமதி இல்லை. இறுதி ஊர்வலங்களில் 20 பேருக்கு மேல் பங்கேற்கக் கூடாது. திருமண நிகழ்ச்சிகளுக்குத் தற்போதுள்ள நடைமுறைகள் தொடரும்.
window.googletag = window.googletag || {cmd: []};
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/nk_desktop_ap_display_mr_p3', [300, 250], 'div-gpt-ad-1584956668553-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.enableServices();
});
window.googletag = window.googletag || {cmd: []};
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/nk_mobile_ap_display_mr_p1', [300, 250], 'div-gpt-ad-1584957472633-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.enableServices();
});
ஏற்கனவே நடைமுறையில் உள்ள கட்டுப்பாடுகள் விவரம்:
ஏற்காடு சுற்றுலாத் தலத்திற்கு வெளியூர் சுற்றுலாப் பயணிகள் செல்லத் தடை விதிக்கப்படுகிறது. தமிழ்நாடு முழுவதும் நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளில் தற்போது உள்ள நடைமுறைகளின்படி, எந்த விதமான தளர்வுகளும் இன்றி ஊரடங்கு முழுமையாகக் கடைப்பிடிக்கப்படும்.
நோய்க்கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர பிற பகுதிளில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட பணிகளுக்கு மட்டும் அனுமதி தொடரும். சேலம் மாவட்டத்தில் நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர, பிற பகுதிகளில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட பணிகளுக்கு அனுமதி தொடரும்.
சேலம் மாவட்டத்திற்குத் தற்போது அறிவிக்கப்பட்டு உள்ள புதிய தளர்வுகள் என்னென்ன?:
சேலம் மாவட்டத்திற்குள் போக்குவரத்து இயக்கத்திற்கு மட்டும் TN e-pass இல்லாமல் இயக்கத் தளர்வு அளிக்கப்படுகிறது.
சேலம் மாவட்டத்திற்குள் நோய்த்தொற்று பரவாமல் தடுக்க பொதுமக்கள் அனுமதிக்கப்பட்ட பணிகளுக்கும், அத்தியாவசியப்பணிகளுக்கு மட்டும் சென்று வர போக்குவரத்தைப் பயன்படுத்திக்கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.ஒரு மாவட்டத்தில் இருந்து இன்னொரு மாவட்டத்திற்குச் சென்றுவர TN e-pass பெற்று செல்லும் தற்போதைய நடைமுறை தொடரும்.
அரசுப்பணிகள் மற்றும் தனியார் தொழிற்சாலைகளுக்குச் சிறப்பு அனுமதி வழங்கப்பட்டு இயக்கப்படும் அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் அதிகபட்சமாக 20 நபர்களும், வேன்களில் 7 நபர்களும், இன்னோவா போன்ற பெரிய வகை கார்களில் 3 நபர்களும், சிறிய கார்களில் 2 நபர்களும் செல்ல அனுமதிக்கப்படுகிறது.
சேலம் மாவட்டத்தில் போக்குவரத்து அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் TN e-pass இல்லாமல் வாடகை மற்றும் டாக்சி வாகனங்களை அத்தியாவசியப் பணிகளுக்கான வேளாண்மை, வியாபாரம், மருத்துவம் போன்ற பணி நிமித்தம் பயணம் செய்ய மட்டும் பயன்படுத்தப்பட வேண்டும். தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியில் செல்வதைக் கண்டிப்பாக பொதுமக்கள் தவிர்க்க வேண்டும். தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டம் & தற்போதுள்ள 50 சதவீத பணியாளர்களை 100 சதவீத பணியாளர்களாக உயர்த்துவதற்கு அனுமதி அளிக்கப்படுகிறது.
சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிளில் தற்போதுள்ள தளர்வுபடி 50 நபர்களுக்கு குறைவாகப் பணியாற்றும் தொழிற்சாலைகளில் 100 சதவீத பணியாளர்களும், 50 நபர்களுக்கு மேல் பணியாளர்களின் எண்ணிக்கை உள்ள தொழிற்சாலைகளில் 50 சதவீதம் பணியாளர்களுக்கும் அனுமதி வழங்கப்பட்ட நிலையில் இதை மேலும் தளர்வு செய்து 100 நபர்களுக்கும் குறைவாகப் பணிபுரியும் தொழிற்சாலைகளில் 100 சதவீதம் பணியாளர்களும், 100 நபர்களுக்கு மேல் பணியாளர்களின் எண்ணிக்கை உள்ள தொழிற்சாலைகளில் 50 சதவீதம் பணியாளர்கள் அல்லது குறைந்தபட்சம் 100 பணியாளர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுகிறது.
ஊரடங்கு காலத்தில் தற்காலிகமாக மூடப்பட்டிருக்கும் தனியார் மற்றும் வியாபார நிறுவனங்களின் அத்தியாவசியப் பராமரிப்பு பணிகளுக்காக மட்டும் குறைந்தபட்ச பணியாளர்களுடன் இயங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்களை திருத்தும் பணி மட்டும் நடைபெற விலக்களிக்கப்படுகிறது.
தேசிய மற்றும் சர்வதேச விளையாட்டுப் போட்டிகளுக்கு தனி பயிற்சியாளர் மூலம் பயிற்சி பெற விலக்களிக்கப்படுகிறது. இதற்காக மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெற வேண்டும். பொதுமக்கள், அலுவலர்கள், தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைவரும் முகக் கவசங்களை அணிந்து, சமூக இடைவெளியினை பின்பற்றி, சோப்பை உபயோகப்படுத்தி அடிக்கடி கைகளைக் கழுவும் நடைமுறையைப் பின்பற்றி, போதுமான கிருமிநாசினிகளைப் பயன்படுத்திட வேண்டும்.
பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் பாதுகாப்பாகப் பணியாற்றுவதை உறுதி செய்வதோடு, அரசால் வெளியிடப்பட்டுள்ள நிலையான செயல்பட்டு நடைமுறைகளைத் தீவிரமாகக் கடைப்பிடிப்பதோடு, ஊரடங்கு உத்தரவு உத்தரவு தொடர்வதால் பொது இடங்களில் 5 நபர்களுக்கு மேல் மக்கள் கூடுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
கரோனா வைரஸ் தாக்கத்தைக் கட்டுப்படுத்த இந்நோய்ப் பரவாமல் தடுத்திட, தமிழ்நாடு அரசு மற்றும் சேலம் மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வரும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரும் முழு ஒத்துழைப்பு அளித்து தமிழ்நாடு அரசுக்கும், சேலம் மாவட்ட நிர்வாகத்திற்கும் மற்றும் காவல்துறைக்கும் முழுமையான ஒத்துழைப்பை நல்க வேண்டும் என்றும் ஆட்சியர் ராமன் தெரிவித்துள்ளார்.