சேலம் மாவட்டம் இடைப்பாடி அருகே கொங்கணாபுரத்தில் உள்ள திருச்செங்கோடு வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், பிப். 16ம் தேதி பருத்தி ஏலம் நடந்தது. இந்த ஏலத்தில் சேலம், நாமக்கல், தர்மபுரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் பருத்தியை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். மொத்தம் 13 ஆயிரம் மூட்டை பருத்தி விற்பனைக்கு குவிந்தன.

Advertisment

salem district konganapuram cotton auction sales high

டிசிஹெச் ரக பருத்தி குவிண்டால் 6850 முதல் 7799 ரூபாய் வரையிலும், பி.டி. ரக பருத்தி குவிண்டால் 5059 முதல் 5959 ரூபாய் வரையிலும் ஏலம் போனது. மொத்தம் 3.10 கோடி ரூபாய்க்கு பருத்தி ஏலம் மூலம் விற்பனை ஆனது.

Advertisment

அதேபோல், பிப். 15ம் தேதி நடந்த ஏலத்தின்போது, 5100 பருத்தி மூட்டைகள் மொத்தம் 1.20 கோடி ரூபாய்க்கு ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட்டது. இரண்டு நாள்களில் நடந்த ஏலத்தில் மட்டும் மொத்தம் 4.30 கோடி ரூபாய்க்கு பருத்தி ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஏலம் முடிந்ததும் விவசாயிகளுக்கு உடனுக்குடன் பணப்பட்டுவாடா செய்யப்பட்டது. பருத்திக்கு ஓரளவு நல்ல விலை கிடைத்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.