சேலத்தில், தலை, கைகள் வெட்டப்பட்ட நிலையில் மர்மமான முறையில் இளைஞர் ஒருவர் கொலையான சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம் அழகாபுரத்தில் இருந்து செட்டிச்சாவடி செல்லும் வழியில் உள்ள பசுவக்கல் என்ற பகுதியில், நாய் ஒன்று மனிதனின் அழுகிய கையை ஒன்றை வாயில் கவ்வியபடி தெருவில் திங்கள்கிழமை (பிப். 24) சுற்றிக் கொண்டிருந்தது. பசுவக்கல் பகுதியில் முள்புதர் ஓரமாக கடும் துர்நாற்றமும் வீசியது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் அழகாபுரம் காவல்நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.

salem district incident police investigation

Advertisment

சிறப்பு எஸ்ஐ சரவணன் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடம் விரைந்தனர். அங்கே 30 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் ஒன்று, தலை மற்றும் இடது கை துண்டிக்கப்பட்ட நிலையில் கிடந்தது. சடலம் கிடந்த இடத்தில் இருந்து 50 மீட்டர் தொலைவில், சடலத்தின் தலை மட்டும் தனியாக கிடந்தது. அந்த வாலிபரை மர்ம நபர்கள் கொலை செய்து, சடலத்தை இங்கே கொண்டு வந்து போட்டிருப்பது தெரிய வந்தது.

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

சடலத்தைக் கைப்பற்றிய காவல்துறையினர் உடற்கூறு ஆய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சடலம் அழுகிய நிலையில் இருந்ததால், கொலை நடந்து 72 மணி நேரத்திற்கு மேல் ஆகியிருக்கலாம் எனவும் சந்தேகிக்கின்றனர்.

சேலம் மாநகர் மற்றும் மாவட்டத்தில் அண்மையில் காணாமல் போன நபர்களின் பட்டியல் சேகரித்து, அதன் அடிப்படையில் கொலையானவரை தேடும் முயற்சிகளில் காவல்துறையினர் இறங்கியுள்ளனர்.

மேலும், சடலம் கிடந்த இடத்திற்கு சற்று தொலைவில் துணி ஏற்றுமதி நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. அங்கு வடமாநிலங்களைச் சேர்ந்த பலர் வேலை செய்து வருகின்றனர். அவர்களிடமும் விசாரணை நடந்து வருகிறது. கொல்லப்பட்ட நபர் காக்கி நிறத்தில் பேண்ட் அணிந்திருந்தார். அதனால் அவர் ஆட்டோ ஓட்டுநராக இருக்கலாம் என்ற சந்தேகத்தின்பேரில், ஆட்டோக்காரர்களிடமும் விசாரணை நடந்து வருகிறது.