சேலம் மாவட்டம் கெங்கவல்லி 7- வது கோட்டத்தைச் சேர்ந்தவர் வேலாயுதம் மனைவி காமாட்சி (80). இவர்களது மகள் சுமதி (45).காமாட்சியின் வீடு மண் சுவரால் ஆனது. தற்போது அடிக்கடி மழை பெய்து வருவதால், வீடு இடிந்து விழுந்து விடும் அச்சம் காரணமாக, காமாட்சி தினமும் இரவு நேரங்களில் அருகில் உள்ள மகள் சுமதியின் வீட்டுக்கு உறங்குவதற்காகச் சென்று விடுவார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/grand mother2.jpg)
இன்று காலையில் வழக்கம்போல் அவர் தனது வீட்டுக்கு வந்து கட்டிலில் படுத்து இருந்தார். அப்போது திடீரென்று காமாட்சியின் மீது மண் சுவர் இடிந்து விழுந்தது. இதில் அவர் நிகழ்விடத்திலேயே பலியானார்.
கடந்த ஒரு வாரமாக பெய்து வந்த கனமழையால் சுவர்கள் ஊறிப்போய் ஈரப்பதமாக இருந்துள்ளதே, இடிந்து விழுந்ததற்குக் காரணம் என்று சொல்லப்படுகிறது. இதுகுறித்து வருவாய்த்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
Follow Us