salem district grocery shops police investigation

Advertisment

சேலத்தில், மளிகைக் கடைக்காரர் வீட்டில்,தடை செய்யப்பட்ட 19 மூட்டை குட்கா போதைப் பொருள்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

சேலம் சூரமங்கலம் பகுதியில் உள்ள கிடங்குகளில் குட்கா, புகையிலை பொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக மாநகர காவல்துறைக்குத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து, சூரமங்கலம் காவல்துறையினர் அப்பகுதியில் உள்ள கிடங்குகளில் சில நாள்களாக திடீர் சோதனை நடத்தி வருகின்றனர். திங்களன்று (ஜன. 11) காலை சூரமங்கலம் உழவர் சந்தை அருகே ரங்கா நகரில், மளிகை கடை நடத்தி வரும் தல்சாராம் என்பவரின் கடையில் சோதனை நடத்தினர்.

Advertisment

கடையை ஒட்டியுள்ள அவருடைய வீட்டிலும் சோதனை நடந்தது. இதில், வீட்டில் இருந்து ஒரு அறையில், 19 மூட்டைகளில் குட்கா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. அவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். அவற்றின் மதிப்பு 5.70 லட்சம் ரூபாய்.

இதுகுறித்து தல்சாராமிடம் விசாரணை நடத்தியதில், பெங்களூருவில் இருந்து குட்கா பொருள்களைக் கடத்திவந்து பதுக்கிவைத்து உள்ளூரில் விற்பனை செய்துவந்தது தெரிய வந்தது. அவரிடம் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.