ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், சித்திரை திருநாளையொட்டி சேலம் ராஜகணபதி கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்ததாக அர்ச்சகர்கள் கைது செய்யப்பட்டனர்.

Advertisment

கரோனா வைரஸ் பரவல் காரணமாக, தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு அமலில் உள்ளது. அத்தியாவசியத்தேவைகளின்றி யாரும் வெளியில் நடமாடக்கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது. திரையரங்குகள், கோவில்கள், வணிக நிறுவனங்கள் என மக்கள் கூடும் இடங்கள் அனைத்தும் மூடப்பட்டன.

Advertisment

salem district  famous rajaganapathi temple police

இந்நிலையில், சித்திரை திருநாளையொட்டி, பிரசித்திப் பெற்ற சேலம் ராஜகணபதி கோவிலைத் திறந்து அர்ச்சகர்கள் சிறப்பு பூஜைகள் செய்தனர். அப்போது பக்தர்கள் சிலரும் வரிசையில் நின்று வழிபட்டனர்.

தடை உத்தரவு அமலில் உள்ள காலத்தில் கோவிலைத் திறந்து பூஜைகள் செய்ததாகக் காவல்துறைக்குபுகார்கள் சென்றன. இதையடுத்து ராஜகணபதி கோவில் அர்ச்சகர்கள் ராஜா, விஸ்வநாதன் உள்பட 8 பேர் மீது சேலம் நகர காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, கைது செய்தனர். பின்னர் அவர்கள் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்.

Advertisment

அதேபோல் சேலம் டவுன் ரயில்நிலையம் அருகில் உள்ள சாஸ்தா நகர் அய்யப்பன் கோவிலில் புத்தாண்டையொட்டி அய்யப்பனுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டன.

இதுகுறித்தும் காவல்துறைக்கு புகார்கள் சென்றன. இதையடுத்து அய்யப்பன் கோவில் நிர்வாகிகள் சீதாராமன், ஸ்ரீதர்பட்டு, பிரேமிகன் வெங்கடாசலம், விஸ்வநாதன் என மொத்தம்10 பேர் மீது தடை உத்தரவை மீறுதல், ஒன்றாகக் கூடுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.