Advertisment

அரசு சார்பில் போட்டித் தேர்வுக்கு இலவச பயிற்சி; ஜூன் 1ல் தொடக்கம்

 salem district employment office conduct free coaching for tnusrb exam

Advertisment

காவல்துறை உதவி ஆய்வாளர், தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வில் கலந்து கொள்ளும் தேர்வர்களுக்கு சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இலவச பயிற்சி வகுப்பு ஜூன் 1 ஆம் தேதி தொடங்குகிறது.

இது தொடர்பாக சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "காவல்துறையில் காலியாக உள்ள 621 உதவி ஆய்வாளர் பணியிடங்கள், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையில் காலியாக உள்ள 129 நிலைய அதிகாரி பணியிடங்கள் ஆகியவற்றை நிரப்புவதற்கான போட்டித் தேர்வு அறிவிப்பு விரைவில் வெளியிடப்பட உள்ளது. தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தால் (TNUSRB) இத்தேர்வு நடத்தப்படும்.

இத்தேர்வுகளுக்கு இணையதளத்தில் ஜூன் 1 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு சேலம் கோரிமேட்டில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 1 ஆம் தேதி தொடங்குகிறது. பாடக் குறிப்புகள் இலவசமாக வழங்கப்படுவதோடு, மாதிரித் தேர்வுகளும் நடத்தப்பட உள்ளன. இப்பயிற்சி வகுப்பு தொடர்பான விவரங்களை 8012120115 என்ற அலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம். சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த காவல்துறை உதவி ஆய்வாளர், தீயணைப்பு நிலைய அலுவலர், இரண்டாம் நிலைக் காவலர் பணிகளுக்கானத்தேர்வுக்கு தயாராகும் தேர்வர்கள் இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயன்பெறலாம்"என மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.

COACHING tnusrb police Salem
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe