Skip to main content

கரோனா அபாயம்; வெளிமாவட்டத்தில் இருந்து சேலத்திற்குள் நுழைந்தவர்கள் பற்றி தகவல் சேகரிப்பு!

Published on 29/05/2020 | Edited on 29/05/2020

 

salem district corporation commissioner order satheesh kumar


கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில், வெளிமாவட்டம், வெளி மாநிலங்களில் இருந்து சேலம் மாநகருக்குள் யாரேனும் வந்து தங்கியிருந்தால், அதுபற்றி உடனடியாகத் தகவல் தெரிவிக்க வேண்டும் என்று சேலம் மாநகராட்சி ஆணையர் சதீஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
 


சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கரோனா தொற்று நோய்த்தடுப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சமூக விலகல் கடைப்பிடிக்கப்படாத கடைகள், நிறுவனங்கள் மீது பாரபட்சமின்றி மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, வெளிமாநிலங்கள், பிற மாவட்டங்களில் இருந்து சேலம் மாநகர பகுதிகளுக்கு வருபவர்களைத் தீவிரமாகக் கண்காணித்து, கரோனா தொற்று பரவாமல் இருப்பதற்காகச் சிறப்பு நடவடிக்கைகளையும் மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. 

கடந்த 27.4.2020 முதல் வெளிமாநிலங்கள், பிற மாவட்டங்களில் இருந்து சேலம் வருகை தரக்கூடியவர்களை மாநகராட்சி எல்லைப் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள சோதனைச்சாவடியில் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு வருகிறது. ஆவணங்கள் சரிபார்க்கப்பட்ட பின்னர், அவர்களை கருப்பூர் அரசு பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தும் பகுதியில் கரோனா நோய்த்தொற்று பரிசோதனை செய்யப்படுகிறது. மருத்துவப் பரிசோதனை முடிவுகள் தெரிவிக்கப்பட்ட பின்னரே மாநகர பகுதிகளுக்குள் நுழைய அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
 

salem district corporation commissioner order satheesh kumar

 


மேலும், தமிழக அரசின் அனுமதியின்றி மாநகர பகுதிகளுக்குள் வெளிமாநிலங்கள், பிற மாவட்டங்களில் இருந்து வரும் நபர்களைக் கண்டறிய மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில் 4 மண்டலங்களிலும் பொதுமக்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் தலைமையிலான சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது. இக்குழுவினர் பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் தகவல்களின் அடிப்படையில் களஆய்வு செய்து, உடனடியாகச் சம்பந்தப்பட்ட நபர்களைத் தனிமைப்படுத்தும் பகுதிகளுக்கு அழைத்துச் சென்று மருத்துவப் பரிசோதனை மேற்கொள்கின்றனர். பரிசோதனையின் முடிவில் நோய்த்தொற்று இல்லை என்பதை உறுதி செய்த பின்னர், அவர்களுடைய வீடுகளுக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டு, சம்பந்தப்பட்டவர்களை 14 நாள்கள் அவர்களுடைய வீடுகளில் தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், தமிழக அரசின் முன் அனுமதியின்றி சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்குள் வருகை தருபவர்கள் கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட நபர்களை மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தி கருப்பூர் அரசு பொறியியல் கல்லூரியில் உள்ள தனிமைப்படுத்தும் பகுதியில் 28 நாள்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள். மேலும் சம்பந்தப்பட்ட நபர்கள் மீதும், அவர்களுக்கு அடைக்கலம் வழங்கியவர்கள் மீதும் காவல்துறையினர் மூலம் நடவடிக்கை மேற்கொள்ள பரிந்துரை செய்யப்படும்.
 

http://onelink.to/nknapp


எனவே, சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்கள் தங்கள் குடும்பங்களிலோ அல்லது தங்கள் வசிக்கும் பகுதிகளிலோ அரசின் முன் அனுமதியின்றி வெளிமாநிலங்கள் மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து வருகை புரிந்த நபர்கள் இருந்தால், அதுகுறித்த விவரங்களை மாநகராட்சி அலுவலகங்களிலோ, மாநகராட்சி பணியாளர்கள் மற்றும் காவல்துறையினரிடமோ தெரிவிக்க வேண்டும். மாநகராட்சி நிர்வாகம் மேற்கொள்ளும் கரோனா தொற்று நோய்த்தடுப்பு நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்புத் தருமாறு மாநகராட்சி ஆணையர் சதீஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.


 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கஞ்சா கடத்தலுக்கு துணைபோன தனிப்படை; அதிரடி காட்டிய காவல் ஆணையர்

Published on 03/02/2024 | Edited on 03/02/2024
Trichy Commissioner who replaced the special force that was involved smuggling of cannabis

தமிழ்நாடு முழுவதும் குற்ற சம்பவங்களை முன் கூட்டியே அறிந்து தடுப்பதற்காகவும், போதை பொருள் விற்பனை, கடத்தல், உள்ளிட்ட விரோதமான செயல்களில் ஈடுபடும் நபர்களை பிடிப்பதற்கு என்று அந்தந்த மாவட்டங்களிலும், மாநகரங்களிலும், காவல்நிலையங்களை தாண்டி, அதிகாரிகள் தங்களுக்கென்று ஒரு தனிப்படையை உருவாக்குவார்கள். அதில் சிறப்பாக பணியாற்றும் காவலர்கள் யார் என்பதை அறிந்து அவர்களைத் தேர்வு செய்து, மாநகரிலும், மாவட்டத்திலும் குற்றங்களை தடுக்கும் விதமாக இந்த தனிப்படை செயல்படும்.

அதேபோல் தான் திருச்சி மாநகரில் அதிகரித்து வரும் குட்கா, கஞ்சா, போதை வஸ்துகள், லாட்டரி உள்ளிட்ட சட்டவிரோதமான செயல்பாடுகளை கட்டுப்படுத்தவும், அதில் ஈடுபடும் நபர்களை கைது செய்யவும் 5 பேர் கொண்ட ஒரு தனிப்படை அமைக்கப்பட்டிருந்தது. அதில் திருச்சி மாநகரில் காந்தி மார்க்கெட் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றிய குமார் தலைமையில் தலைமைக் காவலர்கள் சங்கராந்தி, ராஜேஸ்குமார், குமார், தங்கராஜ் உள்ளிட்ட 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இவர்கள் மாநகர் பகுதியில் கஞ்சா விற்பனை, லாட்டரி விற்பனை உள்ளிட்டவற்றை தடுக்காமல், குட்காவை தமிழ்நாட்டிற்குள் கொண்டு வரும் பெரிய முதலாளிகளுக்கு விசுவாசமாக இருந்துள்ளனர். அதேபோல் கஞ்சா விற்பனைக்கும் அவர்கள் துணையாக இருந்ததோடு, வெளிநாடுகளுக்கு சென்று அங்கிருந்து குருவியாக தங்கம் கடத்தி வரும் கும்பல்களோடு நெருங்கிய தொடர்பு ஏற்பட்டதோடு, அவர்களிடம் இருந்து கடத்தி வரும் தங்கத்தை அடித்து பிடிங்கும் பணியிலும் இந்த கும்பல் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

தமிழகத்தின் முன்னாள் டிஜிபியாக இருந்த சைலேந்திர பாபு 2.0, 3.0 என்ற திட்டத்தின்கீழ் குட்கா, கஞ்சா போன்றவை தமிழ்நாட்டிற்குள் வருவதை தடுக்க பல அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. அதே சமயம் தமிழகம் வழியாக கடத்தப்பட்ட பல்லாயிரம் கிலோ கஞ்சா, குட்கா போன்றவை கடத்தி செல்லும் போதே பறிமுதல் செய்யப்பட்டு, கடத்தல்காரர்கள் கைது செய்யப்பட்டனர். ஆனால் பெரிய அளவில் குட்காவை மற்ற மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு கொண்டுவரும் பெரிய முதலாளிகள் யாரும் கைது செய்யப்படவில்லை. அதற்கு பதிலாக அதை கடத்தி கொண்டுவரும் நபர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த குட்கா, கஞ்சா கடத்தல் வழக்குகளில் பெரும்பாலும் காவல்துறையில் பணியாற்றும் தனிப்படையினர் தான் கடத்தல் முதலாளிகளுக்கு உளவாளிகளாக இருந்து வருகின்றனர். அப்படி பெரிய கடத்தல் முதலாளிகளுக்கு தான் இந்த 5 பேர் கொண்ட கும்பலும் உளவாளிகளாக இருந்துள்ளனர். 

இதனையறிந்த திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் 5 பேரையும் நேற்று திடீரென மாநகர ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து உத்தரவிட்டார். பின்னர் அவர்கள் மீது தொடர்ந்து பல குற்றசாட்டுகள் முன் வைக்கப்பட்டதையடுத்து அவர்களை் 5 பேரையும் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். அதே போல் குற்றச்சாட்டு உறையூர் காவல் ஆய்வாளர் ராஜா மீதும் எழுந்ததால், அவருக்கு ஆணையர் மெமோ கொடுத்து எச்சரித்து அனுப்பியுள்ளார். காவல் ஆணையரின் இந்த அதிரடி நடவடிக்கை காவலர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி இருந்தாலும், இந்த தனிப்படையை இயக்கிய உதவி ஆணையர் ஜெயசீலன் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாமல், கீழ் உள்ள காவலர்களை பழிகடாவாக்கியுள்ளனர். உயர் அதிகாரிகளின் இதுபோன்ற சம்பவங்களில் எப்போதும் கீழ் நிலையில் உள்ள காவலர்கள் மட்டுமே பாதிக்கப்படுகின்றனர். எனவே உதவி ஆணையர் மீது நடவடிக்கை எடுப்பார்களா? என்று காவல்துறையினர் வட்டாரங்களில் கிசுகிசுக்க ஆரம்பித்துள்ளனர்.

இது தொடர்ர்பாக நாம் திருச்சி காவல் ஆணையரை தொடர்பு கொண்டு கேட்டபோது, “உதவி ஆணையர் ஜெயசீலன் மீது விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணை முடிந்த பிறகு அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என உறுதியாக தெரிவித்தார். 

Next Story

பிச்சாவரம் சுற்றுலாத்தலம் மேம்படுத்தும் பணி; சுற்றுலாத் துறை ஆணையர் ஆய்வு

Published on 21/11/2023 | Edited on 21/11/2023

 

Commissioner of Tourism inspects the development of Pichavaram tourist site

 

சிதம்பரம் அருகே உள்ள பிச்சாவரம் சுற்றுலா தலத்தை பல்வேறு உட்கட்டமைப்பு வசதிகளுடன் மேம்படுத்தும் பணிகள்  தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் மூலம் நடைபெற்று வருகிறது.  இந்த பணிகளை கடலூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண் தம்புராஜ் முன்னிலையில் முதன்மைச் செயலாளரும் சுற்றுலா துறை ஆணையருமான திருமதி காக்கர்ல உஷா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

 

அப்போது அவர் பிச்சாவரம் அறிஞர் அண்ணா சுற்றுலா வளாகத்திற்கு பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளின் தேவைகளை நிறைவு செய்யும் வகையிலும், சுற்றுலா பயணிகளின் வருகையை அதிகப்படுத்தும் நோக்கத்துடன் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் வாயிலாக பிச்சாவரம் சுற்றுலா மையத்தினை மேம்படுத்தும் வகையில் இந்தியாவில் சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கியில் கிளஸ்டர் மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ 14.7 கோடி மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்று வருகிறது பணிகளை விரைவில் முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறினார்.

 

இதனை தொடர்ந்து சிதம்பரத்தில்  தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக நிதியின் மூலம் ரூ 8.65 கோடி மதிப்பீட்டில் ஹோட்டல் தமிழ்நாடு கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதையும் ஆய்வு மேற்கொண்டனர். இதில் சிதம்பரம் உதவி ஆட்சியர் சுவேதாசுமன், வட்டாட்சியர் செல்வக்குமார் கிள்ளை பேரூராட்சி மன்ற துணைத்தலைவர் கிள்ளை ரவீந்திரன்,  சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் செயற்பொறியாளர் பௌல், மாவட்ட சுற்றுலா அலுவலர் முத்துசாமி, உதவி செயற்பொறியாளர் முனிசாமி,  பிச்சாவரம் படைக்கு இல்ல அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.