salem district collector transfer tn govt chief secretary

Advertisment

சேலம், தர்மபுரி உள்ளிட்ட 5 மாவட்ட ஆட்சியர்கள் திடீரென்று இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழ்நாடு தொழில் மேம்பாட்டுக் கழக நிர்வாக இயக்குநராக பணியாற்றிவரும் அனீஷ் சேகர், மதுரை மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு மாநில சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை இணைச் செயலராக உள்ள கார்மேகம், சேலம் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.தமிழ்நாடு மாநில ஆணைய செயலர் பாலசுப்ரமணியம், கடலூர் மாவட்ட ஆட்சியராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

Advertisment

மாநில தொழில் மற்றும் வர்த்தகத்துறை கூடுதல் ஆணையர் சிவராசு, திருச்சி மாவட்ட ஆட்சியராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.திருச்சி மாவட்ட ஆட்சியராக பணியாற்றி வரும் திவ்யதர்ஷினி, தர்மபுரி மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கான உத்தரவை தமிழக தலைமைச் செயலர் இறையன்பு, திங்கள்கிழமை (மே 17) பிறப்பித்துள்ளார்.

தற்போது சேலம் மாவட்ட ஆட்சியராக உள்ள ராமன், மதுரை மாவட்ட ஆட்சியர் அன்பழகன், தர்மபுரி மாவட்ட ஆட்சியர் கார்த்திகா ஆகியோருக்குப் புதிய பணியிடங்கள் ஒதுக்கப்படவில்லை.

Advertisment

சேலம் மாவட்டத்திற்குப் புதிய ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ள கார்மேகம், கடந்த 2003 - 2004ஆம் ஆண்டில் சேலம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக பணியாற்றிவர். பள்ளிக்கல்வித்துறையில் இருந்து ஐஏஎஸ் ஆக பதவி உயர்வுபெற்ற வெகுசிலரில் கார்மேகமும் ஒருவர். பள்ளிக்கல்வித்துறையில் நேர்மையான அதிகாரி என பெயர்பெற்றவர்.