சேலம் மாவட்டத்தில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பேரூராட்சிகள் மண்டல உதவி இயக்குநர் அலுவலகத்தில் பணியாற்றி வரும் 2 ஊழியர்களுக்கு, கடந்த இரு நாள்களுக்கு முன்பு, கரோனா நோய்த்தொற்று உறுதிபடுத்தப்பட்டது.
இதையடுத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முழுவதும் கிருமி நாசினி மருந்து தெளிக்கப்பட்டது. மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சனி, ஞாயிறு ஆகிய இரு நாள்களும் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இவ்விரு நாள்களிலும் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்துத் துறைகளிலும் பணியாற்றி வரும் 900 ஊழியர்களுக்கும் இரு நாள்களாக கொரோனா தொற்று கண்டறியும் பரிசோதனை நடந்து வருகிறது.