சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே இருசக்கர வாகனத்தின் மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.வீரகனூரில் இருந்து தலைவாசல் செல்லும் சாலையில் நடந்த விபத்தில் இரு சக்கர வாகனத்தில் சென்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய் சந்திரா(40), மகள் நித்யா(18), மகன் சக்திவேல்(16) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் உயிரிழந்தவர்களின் சடலத்தை மீது பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தனியார் பேருந்து ஓட்டுனரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றன. ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.