கரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்வதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் சேலம் சென்ற தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், சேலம் உருக்காலை வளாகத்தில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 500 படுக்கை வசதிகள் கொண்ட கரோனா சிகிச்சை மையத்தை திறந்துவைத்தார்.
இந்நிகழ்வின்போது, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் வி. செந்தில் பாலாஜி, நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், சேலம் மாவட்ட ஆட்சியர் எஸ்.கார்மேகம் இ.ஆ.ப., அரசு உயரதிகாரிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இதனிடையே, சேலம் உருக்காலையில் 10 நாட்களுக்குள் கூடுதலாக 500 படுக்கை வசதிகளை ஏற்படுத்தி, இந்தியாவிலேயே முதன்மையான சிறப்பு சிகிச்சை மையமாக மாற்ற முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.