salem corporation municipality commissioner transfer tn govt order

சேலம் மாநகராட்சி ஆணையர் சதீஷ் உள்பட தமிழகம் முழுவதும் 22 வருவாய் அலுவலர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தமிழக வருவாய்த்துறையில் ஒரே இடத்தில் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வந்த அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Advertisment

அதன்படி, சேலம் மாநகராட்சி ஆணையராக பணியாற்றி வந்த சதீஷ், கிருஷ்ணகிரி மாவட்ட வருவாய் அலுவலராகவும், இங்கு பணியாற்றி வந்த சாந்தி, ஓசூர் ரிங் ரோடு திட்ட சிறப்பு அலுவலராகவும், மதுரை இந்து சமய அறநிலையத்துறை சிறப்பு அலுவலராக இருந்த முத்துமாரி, மதுரை டாஸ்மாக் மண்டல மேலாளராகவும், இங்கு பணியாற்றி வந்த குமரேஸ்வரன் மதுரை இந்து சமய அறநிலையத்துறை சிறப்பு அலுவலராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Advertisment

தர்மபுரி மாவட்ட வருவாய் அலுவலராக இருந்து வந்த ரஹமத்துல்லாகான் அம்மாவட்ட கூட்டுறவு சர்க்கரை ஆலை மேலாளராக நியமிக்கப்பட்டு உள்ளார். அங்கு பணியாற்றி வந்த அஜய் சீனிவாசன் சென்னை சுகாதாரத் திட்ட அலுவலராகவும், தர்மபுரி சிப்காட் புதிய தொழில் பூங்கா சிறப்பு அலுவலராக பணியாற்றிய ராமமூர்த்தி தர்மபுரி மாவட்ட வருவாய் அலுவலராகவும், கிருஷ்ணகிரி மாவட்ட சிறப்பு அலுவலராக இருந்த ராஜேஸ்வரி சென்னை மாவட்ட வருவாய் அலுவலராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் உள்பட மொத்தம் 22 வருவாய் அலுவலர்கள் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

மேலும், துணை ஆட்சியர்கள் 9 பேருக்கு பதவி உயர்வு வழங்கி அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான உத்தரவை தலைமை செயலாளர் சண்முகம் பிறப்பித்துள்ளார்.

Advertisment