Salem Corporation

Advertisment

சேலம் மாநகராட்சிக்கு நான்கு மண்டலங்களிலும் 1,048 நிரந்தரத் தூய்மைப் பணியாளர்கள், 1,063 சுய உதவிக்குழு தூய்மைப் பணியாளர்கள் என மொத்தம் 2,111 தூய்மைப் பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

Advertisment

அவர்கள் வழக்கமான பணிகளைச் செய்வதோடு, கரோனா நோய்த்தொற்று தடுப்புப் பணிகளிலும் இரவு, பகல் பாராமல் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 2018 - 2019 ஆம் ஆண்டில் 26 லட்சம் ரூபாய் மதிப்பில் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டன.

இந்நிலையில், மாநகர பகுதிகளில் சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்புப் பணிகள் மேற்கொள்ள ஏதுவாக 4 மண்டலங்களுக்கு உட்பட்ட 60 கோட்டங்களிலும் பணியாற்றி வரும் 2,111 தூய்மைப் பணியாளர்களுக்கும் முதல்கட்டமாக 15 லட்சம் ரூபாயில் 990 தடிமார், 990 கை விளக்குமாறு, 990 இரும்பு முறம், 600 நார் பிரஷ், 300 சிறிய சாக்கடை மண்வெட்டி, 300 பெரிய சாக்கடை மண்வெட்டி உள்பட 14 வகையான 6114 தூய்மைப்பணி உபகரணங்களை ஆணையர் சதீஸ் வழங்கினார்.

அனைத்துத் தூய்மைப் பணியாளர்களும், பணி நேரத்தில் பாதுகாப்பு உபகரணங்களை முறையாகப் பயன்படுத்தி பாதுகாப்புடன் பணியாற்ற வேண்டும் என்று ஆணையர்அறிவுறுத்தினார்.