சேலம் குடிமைப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் பாலசுப்ரமணியம். இவர், திடீரென்று திருவண்ணாமலை மாவட்டத்திற்கு மாற்றப்பட்டார். தொடர்ந்து அவர் மீது பல்வேறு புகார்கள் வந்ததை அடுத்து, இடமாற்றம் செய்யப்பட்டதாக சொல்லப்படுகிறது.
இதையடுத்து, சேலம் குடிமைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு ஆய்வாளராக வளர்மதி நியமிக்கப்பட்டார். அதேபோல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய சேலம் மண்டல குடிமைப்பொருள் தடுப்புப் பிரிவு டிஎஸ்பி ஆக விஜயகுமார் நியமிக்கப்பட்டு உள்ளார்.