கடந்த 2016-ஆம் ஆண்டு சேலம்-சென்னை ரயிலின்மேற்கூரையில் துளையிட்டு வடமாநில கொள்ளையர்களால் 5.78 கோடி ரூபாய்கொள்ளை அடிக்கப்பட்டது.
இந்த சம்பவத்தில் மெஹர்சிங் உட்பட 7 பேர்கைது செய்யப்பட்டநிலையில், சிபிசிஐடி போலீசார் இது தொடர்பாகவிசாரித்து வருகின்றனர். இந்த கொள்ளைசம்பவத்தில் திருடப்பட்ட மொத்தத் தொகையான 5.78 கோடி ரூபாய் என்ன ஆனது என்பதுபற்றிய விசாரணையில் மொத்த ரூபாயும் செலவு செய்ததாக கொள்ளையர்கள் தெரிவித்துள்ளனர்.
பணமதிப்பிழப்புக்குமுன்பாகவே 5.78 கோடி ரூபாய் செலவு செய்ததாக கொள்ளையர்கள் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. இது தொடர்பாக சிபிசிஐடிபோலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.