Skip to main content

சேலத்தில் சிறைக் கைதி திடீர் மரணம்; மாஜிஸ்ட்ரேட் விசாரணை!

Published on 23/05/2020 | Edited on 23/05/2020

 

SALEM CENTRAL PRISON MAGISTRATE INVESTIGATION


சேலம் சங்கர் நகரைச் சேர்ந்தவர் சீரங்கன். இவருடைய மகன் செல்வம் (42). கடந்த 2011- ஆம் ஆண்டு ஒரு கொலை வழக்கில் அழகாபுரம் காவல்துறையினர் செல்வத்தைக் கைது செய்தனர். இந்த வழக்கில் அவருக்கு சேலம் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்ததை அடுத்து, கடந்த 2017, மே 14- ஆம் தேதி முதல் அவர் சேலம் மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டார்.
 


இந்நிலையில் செல்வம், திடீரென்று தனக்கு நெஞ்சு வலிப்பதாக வெள்ளிக்கிழமை (மே 22- ஆம் தேதி) காலையில் கூறினார். சிறைக்காவலர்கள் அவரை உடனடியாகச் சிறை வளாகத்தில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கே முதல்கட்ட சிகிச்சை அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். 

அங்கு கைதிகளுக்கான ஸ்ட்ராங் அறையில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். ஆயுள் தண்டனை கைதி திடீரென்று இறந்த சம்பவம் சிறைத்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இச்சம்பவம் தொடர்பாக நீதித்துறை நடுவர் விசாரணை நடத்தி வருகிறார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சிறையில் கைதி தற்கொலை! 

Published on 19/05/2022 | Edited on 19/05/2022

 

Prisoner passed away in viluppuram prison

 

விழுப்புரம் மாவட்டம், டி. புதுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த கணேசன் என்பவரின் மகன் முருகன்(38). இவர், அதே கிராமத்தைச் சேர்ந்த சின்னராசு என்பவரை அடித்துக் கொலை செய்ததாக கடந்த பிப்ரவரி மாதம் போலீசார் கைது செய்தனர். இது குறித்து திருவெண்ணெய்நல்லூர் போலீசார் விசாரணை நடத்தி முருகன் மீது வழக்குப்பதிவு செய்து  நீதிமன்ற உத்தரவின்படி வேடம்பட்டு சிறையில் அடைத்தனர். 


கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக சிறையில் இருந்து வந்த முருகன், சிறையில் இருந்தபடியே தனது குடும்பத்தினர் மூலம் நீதிமன்றத்தில் ஜாமின் பெறுவதற்கு முயற்சி செய்து வந்துள்ளார். கடந்த 2 மாதமாக ஜாமீன் கிடைக்காத சோகத்தில் சிறையில் இருந்து வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. 


இந்த நிலையில், சிறையில் உள்ள பாத்ரூமிற்கு நேற்று மாலை 3 மணிக்கு சென்றுள்ளார். வெகு நேரமாகியும் பாத்ரூமிலிருந்து முருகன் வெளியே வராததால் சந்தேகம் அடைந்த சிறை வார்டன் பாத்ரூம் கதவை திறந்து பார்த்தபோது முருகன் தனது கைலியால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதை பார்த்து பதறிப்போன வார்டன், அருகில் இருந்தவர்கள் உதவியுடன் முருகனை மீட்டு விழுப்புரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு கொண்டு சென்று சேர்த்தனர். 

 

அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் முருகன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முருகன் உடல் பிரேத பரிசோதனைக்காக  அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை கைதி இறந்தது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

 

Next Story

ஆயுள் தண்டனை கைதி மரணம்! 

Published on 02/05/2022 | Edited on 02/05/2022

 

Life sentence prisoner passed away

 

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி பனங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் சண்முகம் என்ற ராமசாமி(79). இவருடைய மனைவி சகுந்தலா(60). கடந்த 2015-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் குடிபோதையில் சண்முகம் தனது மனைவி சகுந்தலாவை கோடாரியால் வெட்டி கொலை செய்தார். இதுகுறித்த புகாரின் பேரில் கீரமங்கலம் போலீசார் சண்முகத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர். 

 

அந்த வழக்கில் சண்முகத்துக்கு புதுக்கோட்டை மகிளா நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது. அதைத்தொடர்ந்து திருச்சி மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த சண்முகம், கடந்த 19ம் தேதி முதல் உடல்நலக்குறைவால் திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். இந்தநிலையில், அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து திருச்சி மத்தியச் சிறை அலுவலர் சண்முகசுந்தரம் கொடுத்த புகாரின் பேரில் திருச்சி கே.கே.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.