salem central jail warden dismissed for long absent 

Advertisment

சேலம் மத்திய சிறைச்சாலை வார்டன் ஒருவர் முன்னறிவிப்பின்றி பணிக்கு வராமல் இருந்ததைத்தொடர்ந்து அவரை நிரந்தர பணி நீக்கம் செய்து சிறைத்துறை நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

சேலம் மத்திய சிறையில் சீனிவாசன் என்பவர் வார்டன் ஆக பணியாற்றி வந்தார். இந்நிலையில் இவர் கடந்த 2022ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குப் பிறகு முன் அனுமதியின்றி திடீரென்று விடுப்பில் சென்றார். இவர் கடந்த 2017ம் ஆண்டு சிறைத் துறையில் இரண்டாம் நிலை காவலராக பணியில் சேர்ந்தவர்.

இது தொடர்பாக அவரிடம் சிறைத்துறை நிர்வாகம் கடிதம் மூலம் விளக்கம் கேட்டும் பதில் அளிக்கவில்லை. காரணமின்றியும், அனுமதியின்றியும் பணிக்கு வராமல் இருந்தால் பணி நீக்கம் செய்யப்படுவீர் என சிறைத்துறை நிர்வாகம் நோட்டீஸ் அளித்தது. அதற்கும் அவரிடம் இருந்து பதில் ஏதும் வரவில்லை. இதையடுத்து சீனிவாசனை நிரந்தர பணி நீக்கம் செய்து சேலம் மத்திய சிறை எஸ் பி தமிழ்ச்செல்வன் உத்தரவிட்டுள்ளார்.