Advertisment

இளம்பெண்ணுக்கு செல்போனில் பாலியல் தொல்லை... 2 பேர் அதிரடி கைது!

Salem cellphone case two arrested by police

சேலத்தில் இளம்பெண்ணுக்கு செல்ஃபோன் மூலம் பாலியல் தொல்லை கொடுத்ததாக அளித்த புகாரின்பேரில் காவல்துறையினர் இருவரை கைது செய்துள்ளனர்.

Advertisment

சேலம் செட்டிச்சாவடி உயிரியல் பூங்கா சாலையில் வசிப்பவர் ஹரிஹரன் (32). மின்சாதன பொருட்களை வாங்கி விற்கும் தொழில் செய்துவருகிறார். செட்டிச்சாவடி காந்தி நகரைச் சேர்ந்த ராமானுஜம் மகன் வேல்முருகன் (40).

Advertisment

இவர், ஹரிஹரனின் 27 வயதான மனைவிக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு செல்ஃபோனில் தொடர்புகொண்டு பேசினார். அப்போது அவர் இரட்டை அர்த்தத்திலும், பாலியல் தொல்லை தரும் வகையிலும் பேசியுள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த அவருடைய மனைவி, இதுகுறித்து கணவரிடம் கூறினார். அப்போது கணவர் அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. இந்நிலையில், மீண்டும் அக்.10ஆம் தேதியன்று ஹரிஹரனின் மனைவிக்கு வேல்முருகன் செல்ஃபோன் மூலம் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.

இதுகுறித்து அறிந்த ஹரிஹரன், உடனடியாக வேல்முருகனிடம் தட்டிக்கேட்டார். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. ஒருகட்டத்தில் கைகலப்பாக மாறியது. இதைப் பார்த்த வேல்முருகனின் தம்பி சுரேஷ், பிரபாகரன் ஆகியோர் ஹரிஹரனை சரமாரியாக தாக்கியுள்ளனர். கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர்.

இதுகுறித்து ஹரிஹரன் கன்னங்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப் பதிவுசெய்த காவல்துறையினர், வேல்முருகன், பிரபாகரன் ஆகியோரை கைது செய்தனர்; தலைமறைவான சுரேஷை தேடிவருகின்றனர்.

cell phone Salem
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe