Advertisment

சேலம் 'ஈரடுக்கு' மேம்பாலத்தைத் திறந்து வைக்கிறார் இ.பி.எஸ்!

eps

Advertisment

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஒருநாள் பயணமாக வரும் 6 ஆம் தேதி (சனிக்கிழமை) மாலையில் சென்னையில் இருந்து புறப்பட்டு கார் மூலமாக இரவு சேலம் வந்தடைகிறார். சூரமங்கலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள வீட்டில் தங்குகிறார். முன்னதாக அவருக்கு அ.தி.மு.க.வினர், நெடுஞ்சாலை நகரில் வரவேற்புக் கொடுக்கின்றனர்.

மறுநாள் (ஜூன் 7) காலையில், சேலத்தில் 441 கோடி ரூபாய் செலவில் கட்டி முடிக்கப்பட்டுள்ள உயர்மட்ட ஈரடுக்கு மேம்பாலத்தைத் திறந்து வைக்கிறார். நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு அன்று மாலை கார் மூலம் சென்னை கிளம்பிச் செல்கிறார்.

டெல்டா பாசனத்திற்காக நீண்ட காலத்திற்குப் பிறகு இந்த ஆண்டு ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படும் என்று ஏற்கனவே முதல்வர் அறிவித்துள்ளார். அதன்படி, வரும் 12ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படுகிறது. முதல்வரே அணையைத் திறந்து வைக்க உள்ள நிலையில், இதற்காக அவர் ஜூன் 11ஆம் தேதி மாலையில் மீண்டும் கார் மூலம் சேலம் வருகிறார்.

Advertisment

விழா ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம், மாநகர மற்றும் மாவட்டக் காவல்துறையினர் தீவிரமாகச் செய்து வருகின்றனர்.

Salem edapadi palanisamy
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe