Advertisment

கந்துவட்டி கொடுமை; விபரீத முடிவெடுத்த தம்பதியினர் 

salem azhagapuram over interest married couple incident 

சேலம் அழகாபுரம் புதூரைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 66). இவருடைய மனைவி சாந்தி (வயது 56). இவர்களுக்கு ராம கவுண்டர், ராமவேல் ஆகிய இரு மகன்களும், தமிழரசி என்ற மகளும் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகிவிட்டது. மகன்கள் இருவரும் பெற்றோருடன் வசித்து வருகின்றனர். ராஜேந்திரன், பெரிய புதூரில் சொந்தமாக சைக்கிள் கடை வைத்திருந்தார். கடந்த 2000ம் ஆண்டில் ராஜேந்திரன் உள்பட 9 பேர் கூட்டாக சேர்ந்து வாங்கிய லாட்டரி டிக்கெட்டில் 7 கோடி ரூபாய் பரிசு விழுந்தது. அதில், ராஜேந்திரனின் பங்காக ஒரு கோடி ரூபாய் கிடைத்தது. அந்தப் பணத்தை வைத்து குடும்பத்தை நடத்தி வந்துள்ளார். இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை (24.01.2023) அதிகாலை 5 மணியளவில், ராஜேந்திரனின் இளைய மகன் ராமவேல், மாடியிலிருந்து கீழே இறங்கி வந்தபோது, பெற்றோர் தங்கியிருந்த அறைக் கதவு திறந்து கிடந்ததைக்கண்டு அங்கு சென்று பார்த்தபோது, அறைக்குள் தாயும், தந்தையும் வாயில் நுரை தள்ளிய நிலையில் சடலமாகக் கிடந்துள்ளனர்.

Advertisment

இதைப் பார்த்தஅதிர்ச்சியில் ராமவேல் கதறி அழுதார். இதுகுறித்து தகவல் அறிந்த அழகாபுரம் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று, இருவரின் உடல்களையும் மீட்டுபிரேதப் பரிசோதனைக்காகசேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காவல்துறை விசாரணையில்,ராஜேந்திரன்வீடு கட்டுவதற்காக வங்கியில் கடன் பெற்றுள்ளார். அதை திருப்பிச் செலுத்த முடியாததால்அதே பகுதியைச் சேர்ந்த நடேசன் என்பவரிடம் கடந்த 2018ம் ஆண்டு 19 லட்சம் ரூபாய் வட்டிக்கு கடன் வாங்கியுள்ளார். அந்தப் பணத்தைக் கொண்டு வங்கி கடன் நிலுவையை செலுத்திய ராஜேந்திரன், வங்கியில் இருந்து வீட்டு பத்திரத்தையும் மீட்டுக் கொண்டு வந்துள்ளார். அந்தப் பத்திரத்தைநடேசனிடம் வாங்கிய கடனுக்கு அடமானமாக கொடுத்துள்ளார். அசலாக 19 லட்சம் ரூபாய் கடன் கொடுத்துவிட்டு அதற்கு21 லட்சம் ரூபாய் வட்டியுடன் மொத்தம் 40 லட்சம் ரூபாய் கேட்டு கந்துவட்டிக்காரர்கள் மிரட்டி வந்துள்ளனர்.

Advertisment

ஆனால் நடேசனிடம் வாங்கிய கடன் அசல், வட்டி ஆகியவற்றை அவர் சரியாக திருப்பிச் செலுத்தவில்லை எனத்தெரிகிறது.இதனால் அசல், வட்டி, வட்டிக்கு வட்டி என கடன் சுமை அதிகரித்துள்ளது. இதற்கிடையே நடேசனும்அவருடைய குடும்பத்தினரும் கடன் பாக்கிக்காக ராஜேந்திரனின் வீட்டை தங்கள் பெயருக்கு எழுதித் தரும்படி அவரைதொந்தரவு செய்து வந்துள்ளனர். சம்பவத்தன்று இரவும் நடேசன் தரப்பினர் அவரிடம் கடன் தொகையை திருப்பிக் கேட்டு ஆபாச சொற்களால் திட்டி விட்டுச் சென்றுள்ளனர். கடன் கொடுத்தவர்கள் அடிக்கடி வீட்டு வாசலில் நின்றபடி ஆபாசமாக திட்டி விட்டுச் செல்வதால் ராஜேந்திரன், சாந்தி ஆகியோர் மனம்உடைந்த நிலையில், ஒரு கட்டத்தில்தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்துள்ளனர். அதையடுத்து அவர்கள் சம்பவத்தன்று இரவு விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

தம்பதியினர் இறந்து கிடந்த அறையில் காவல்துறையினர் சோதனை நடத்தினர். அங்கிருந்து ராஜேந்திரன் கைப்பட எழுதிய ஒரு தற்கொலை குறிப்பு கடிதம் கைப்பற்றப்பட்டது. அந்தக் கடிதத்தில், ''எங்கள் சாவுக்கு நடேசன், அவருடைய மகன்கள், மகள், மருமகன் உள்ளிட்ட 6 பேரும் தான் காரணம். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று எழுதப்பட்டு இருந்தது. இதையடுத்து நடேசனிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அவர், உள்ளூரைச் சேர்ந்த உலகநாதன் என்பவரிடம் இருந்து குறைந்த வட்டிக்கு கடன் பெற்றுஅந்தப் பணத்தை நடேசன் கூடுதல் வட்டிக்கு ராஜேந்திரன் உள்ளிட்ட பலருக்கு கடன் கொடுத்துள்ளது தெரிய வந்தது. இதையடுத்து நடேசன், உலகநாதன் ஆகிய இருவர் மீதும் கந்துவட்டி தடை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

police Salem
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe