Salem Attur DMK candidate change!

Advertisment

வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில், கூட்டணிக் கட்சிகளுக்கு 61 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளநிலையில், 173 தொகுதிகளில் திமுகபோட்டியிட உள்ளது. அனைத்து கூட்டணிக் கட்சிகளுக்கும் எத்தனை தொகுதிகள் என அறிவித்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை(12.03.2021) திமுக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. திமுகவில் 70 எம்.எல்.ஏக்களுக்கு மீண்டும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. 20 எம்.எல்.ஏக்களுக்கு மீண்டும் வாய்ப்பளிக்கப்படவில்லை.

இந்நிலையில், கடந்த 12ஆம் தேதி வெளியிடப்பட்ட திமுக வேட்பாளர் பட்டியலில், சேலம் ஆத்தூர் தொகுதியில் (தனி) ஜீவா ஸ்டாலின் என்பவர் பெயர் இடம்பெற்றிருந்தது. ஆனால் ஜீவா ஸ்டாலின் ஆதி திராவிடர் இல்லை என சர்ச்சைகள் கிளம்பியதால், தற்போது கு.சின்னதுரை என்பவரைசேலம் ஆத்தூர் தொகுதி வேட்பாளராகதிமுக தலைமை அறிவித்துள்ளது.