Skip to main content

மனைவியுடன் தவறான தொடர்பு; தந்தையை வெட்டிக்கொன்ற மகன்! 

Published on 29/06/2019 | Edited on 29/06/2019

 


ஆத்தூர் அருகே, மனைவியுடனான தவறான தொடர்பை கைவிட மறுத்த தந்தையை மகனும், அவருடைய தாயாரும் வெட்டிக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 


சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள ராமநாயக்கன்பாளையம் பத்து ஏக்கர் காலனி காராமணித்திட்டு பகுதியைச் சேர்ந்தவர் தங்கம் மாரிமுத்து (60). விவசாயி. இவருடைய மனைவி வள்ளியம்மை (48). இவர்களுடைய மகன் லோகநாதன் (28). இவரும் விவசாயம் செய்து வருகிறார். இவருடைய மனைவி கவிதா (28). 

மாரிமுத்து

m


மாரிமுத்துவுக்குச் சொந்தமாக அதே பகுதியில் நான்கு ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. அவருக்கும், அவருடைய மருமகள் கவிதாவுக்கும் தவறான தொடர்பு இருந்து வந்துள்ளது. வீட்டில் யாரும் இல்லாத நேரங்களில் இருவரும், 'தவறான பாலியல் உறவில்' ஈடுபட்டு வந்துள்ளனர். 


அரசல் புரசலாக இதைத் தெரிந்து கொண்ட லோகநாதன் மற்றும் அவருடைய அம்மா வள்ளியம்மை ஆகிய இருவரும் மாரிமுத்துவையும், கவிதாவையும் கண்டித்துள்ளனர். இதனால் குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. என்றாலும், மாமனார், மருமகள் இடையேயான தவறான தொடர்பும் தொடர்ந்துள்ளது.


இந்நிலையில், லோகநாதன் தன்னுடைய சொத்துகளை பிரித்து கொடுத்து விடுமாறு தந்தையிடம் கேட்டுள்ளார். சொத்துகளை பிரித்துக் கொடுத்துவிட்டால் மனைவியுடன் தனியாக சென்று விடுவேன் என்றும் கூறியுள்ளார். ஆனால் மாரிமுத்து சொத்துகளை பிரித்துத் தர முடியாது என்று திட்டவட்டமாக மறுத்துவிட்டார்.   இதற்கிடையே, சில நாள்களுக்குமுன், கவிதாவுக்கும், லோகநாதனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கோபித்துக் கொண்டு கவிதா, தன்னுடைய பெற்றோர் வீட்டுக்குச் சென்றுவிட்டார். 

 

லோகநாதன்

a


நேற்று (ஜூன் 27, 2019) மதியம் மீண்டும் அவர் கணவர் வீட்டுக்குத் திரும்பி வந்தார். நேற்று இரவு லோகநாதன், தன் தந்தையிடம் சொத்துப்பிரிவினை தொடர்பாக தகராறில் ஈடுபட்டுள்ளார். மகனுக்கு ஆதரவாக வள்ளியம்மையும் கணவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். 


ஒரு கட்டத்தில், ஆவேசம் அடைந்த இருவரும் மண்வெட்டி மற்றும் கட்டையால் மாரிமுத்துவை சரமாரியாக தாக்கினர். இதில் பலத்த காயம் அடைந்த அவர், சம்பவ இடத்திலேயே பலியானார். மாரிமுத்து இறந்ததால், பதற்றம் அடைந்த அம்மாவும், மகனும் இரவோடு இரவாக தலைமறைவாகிவிட்டனர்.


இன்று காலை வெகுநேரமாகியும் மாரிமுத்துவின் வீட்டில் இருந்து யாருமே வெளியே வராததால், சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் அவருடைய வீட்டிற்குச் சென்று பார்த்தனர். அங்கு மாரிமுத்து ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடந்தார். 


இதுகுறித்து ஆத்தூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். டிஎஸ்பி ராஜூ, ஆய்வாளர் முருகேசன் மற்றும் காவலர்கள் சம்பவ இடம் விரைந்து வந்து சடலத்தைக் கைப்பற்றி, உடற்கூறு ஆய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 


காவல்துறையினர் விசாரணையில், மாயமான லோகநாதன் சேலம் தாதகாப்பட்டியில் உள்ள ஒரு சுடுகாட்டில் குடிபோதையில் படுத்துக்கிடப்பது தெரிய வந்தது. இதுகுறித்து மாவட்ட தனிப்பிரிவுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தனிப்பிரிவு எஸ்ஐ சம்பத் மற்றும் காவலர்கள் விரைந்து சென்று லோகநாதனை கைது செய்தனர். அவருடைய தாயாரை தேடி வருகின்றனர். 

சார்ந்த செய்திகள்

Next Story

வாச்சாத்தி வன்கொடுமை; குற்றவாளிகள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு

Published on 13/10/2023 | Edited on 13/10/2023

 

Accused in Vachathi case appeal in Supreme Court

 

தர்மபுரி மாவட்டம் வாச்சாத்தி மலைக் கிராமத்தில் சந்தன மரங்கள் பதுக்கப்பட்டுள்ளதாகக் கூறி கடந்த 1992 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக்காலத்தில் வருவாய்த்துறை, வனத்துறை மற்றும் காவல்துறையினர் இணைந்து அதிரடி சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையின் போது வாச்சாத்தி மலைக் கிராமத்தில் உள்ள 18 இளம்பெண்களை அரசு அதிகாரிகள் பாலியல் வன்கொடுமை செய்ததாகப் புகார் எழுந்தது. அதனைத் தொடர்ந்து இந்த குற்றச்சாட்டு தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு 4 இந்திய வனப் பணியைச் (IFS) சேர்ந்த அதிகாரிகள் உட்பட 269 பேர் மீது பல பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

 

19 ஆண்டுகளாக நடைபெற்று வந்த வழக்கில் விசாரணை நடந்த காலகட்டத்திலேயே வழக்கில் சம்பந்தப்பட்ட 54 பேர் இறந்தனர். மீதமுள்ள 215 பேருக்கு ஓராண்டு முதல் 10 ஆண்டுகள் வரை விசாரணை நீதிமன்றம் 2011 ஆம் ஆண்டு தண்டனை வழங்கி இருந்தது. இதில் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு நிரூபணம் செய்யப்பட்டது. தண்டனை பெற்றவர்கள், தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

 

இந்த வழக்கு தொடர்பாகச் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பி. வேல்முருகன், கடந்த மார்ச் 4 ஆம் தேதி வாச்சாத்தி மலைக் கிராமத்திற்கு நேரில் சென்றும் விசாரணை செய்திருந்தார். இதையடுத்து இந்த வழக்கில் அனைத்துத் தரப்பு வாதங்களும் முடிவடைந்த கடந்த மாதம் 29 ஆம் தேதி (29.09.2023) சென்னை உயர்நீதிமன்றம் விசாரணை நீதிமன்றம் கொடுத்த தண்டனையை உறுதி செய்து தீர்ப்பளித்தது. மேலும் நீதிபதி வேல்முருகன், வாச்சாத்தியில் பாலியல் கொடுமையால் பாதிக்கப்பட்ட 18 பெண்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் அவர்களின் குடும்பத்துக்கு வழங்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு வேலை வழங்க வேண்டும் அல்லது தனியார், சுய வேலைவாய்ப்புக்கு வழிவகை செய்ய வேண்டும். வாச்சாத்தி நிகழ்வின் போது அப்போதைய எஸ்.பி, ஆட்சியர், வனத்துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். குற்றம் புரிந்தவர்களிடம் இருந்து தலா 5 லட்சம் ரூபாய் வசூலிக்க வேண்டும்' என உத்தரவிட்டார்.

 

இந்த நிலையில் இந்த வழக்கில் குற்றவாளிகள் 19 பேர் தங்களுக்கு வழங்கப்பட்ட தண்டனைக்கு எதிராக மேல்முறையீடு செய்துள்ளனர். ஏற்கனவே வழக்கின் முதன்மை குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்பட்ட வனப்பணி அதிகாரி நாதன் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை வரும் திங்கட்கிழமை விசாரணைக்கு வரவுள்ள நிலையில், தற்போது சிதம்பரம் உள்ளிட்ட 19 பேர் தங்களது தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளனர்.

 

 

Next Story

போலீசார் அந்தப்பக்கம் திரும்பியிருக்க இந்தப்பக்கம் குற்றவாளிக்கு கஞ்சா சப்ளை; தீயாய் பரவும் வீடியோ

Published on 23/11/2022 | Edited on 23/11/2022

 

 This side supplies ganja to the criminal while the police turn away; A viral video

 

மதுரையில் கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்டவரிடம் காவல்துறையினர் இருக்கும்போதே இளைஞர் ஒருவர் கஞ்சாவை வழங்கிய நிகழ்வு நடந்துள்ளது.

 

மதுரை சம்மட்டிபுரத்தை சேர்ந்தவர் முத்தமிழ். இவர் கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்டவர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் முன் பரிசோதனைக்காக அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு காவல்நிலையத்தில் இருந்து காவலர்கள் முத்தமிழை அழைத்துச் சென்றனர். 

 

மருத்துவமனையில் கஞ்சா கொண்டு வந்த நபர் போன் பேசுவது போல் அங்கும் இங்கும் நடந்து காவலர்களுடன் இருந்த முத்தமிழிடம் காவலர்களுக்கே தெரியாமல் கஞ்சாவினை கொடுத்துள்ளார். வேறொரு நபரால் தனது செல்போனில் பதிவான இந்த காட்சிகள் சமூகவலைதளத்தில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது. 

 

முத்தமிழை அழைத்துச் சென்ற காவலர் கவனக்குறைவாக இருந்ததால் இது போன்று நடந்துள்ளது என்று குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் கவனக்குறைவாக இருந்த காவலர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மதுரை காவல் ஆணையர் விளக்கமளித்துள்ளார். 

 

மேலும், மருத்துவமனையில் பரிசோதனைக்கு வந்த குற்றவாளியிடம் கஞ்சா வழங்கப்பட்டதா அல்லது வேறு ஏதேனும் பொருட்கள் வழங்கப்பட்டதா என்று காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.