Advertisment

அம்மா உணவகங்களில் உணவுடன் இலவச முட்டை!

சேலத்தில் அம்மா உணவகங்களில் காலை, மதிய உணவுடன் இலவசமாக முட்டை வழங்கப்படுகிறது.

Advertisment

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் தமிழகத்தில் இம்மாதம் 30- ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், மே 3- ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கை நீட்டித்து பிரதமர் அறிவித்துள்ளார்.

துரித பரிசோதனை உபகரணங்கள் வந்த பிறகு, பரிசோதனை செய்யப்படும் நபர்களின் எண்ணிக்கை அதிகரிக்கையில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக உயரக்கூடும் எனத் தெரிகிறது. எனினும் தற்போதுவரை தனித்திருத்தல், சமூக இடைவெளி ஆகியவை கடைப்பிடிக்கப்படுகிறது.

SALEM AMMA RESTAURANT PURCHASE FOOD EGG FREE

Advertisment

ஊரடங்கால் ஒரு சில உணவகங்கள் தவிர மற்றவை மூடப்பட்டதால் ஆதரவற்றோர், தெருவோரவாசிகளின் நலன் கருதி தமிழகம் முழுவதும் அம்மா உணவகங்கள் மட்டும் தொடர்ந்து இயங்க அனுமதிக்கப்பட்டு உள்ளன.

சேலம் மாநகர பகுதிகளில் உள்ள 11 அம்மா உணவகங்களும் முழுவீச்சில் இயங்குகின்றன. இந்த உணவகங்களில் காலையில் இட்லி, மதியம் சாம்பார், தயிர், தக்காளி ஆகிய மூன்று வகையான கலவை சாதங்கள் பழைய கட்டணத்தின் அடிப்படையிலேயே வழங்கப்படுகின்றன.

இந்நிலையில், ஏப்ரல் 9- ஆம் தேதி முதல், சேலத்தில் உள்ள அம்மா உணவகங்களில் மதிய வேளையில் மட்டும் உணவுடன் இலவசமாக முட்டையும் வழங்கப்பட்டு வந்தது. ஏப்ரல் 14- ஆம் தேதி முதல் காலை மற்றும் மதியம் ஆகிய இரு வேளைகளிலும் உணவுடன் இலவசமாக முட்டைகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளன.

http://onelink.to/nknapp

மேலும், தூய்மைப் பணியாளர்களுக்கும் இரு வேளைகளிலும் முட்டையும், வீடற்றோர்களுக்கான இரவு நேரதங்கும் விடுதிகளில் இருப்போருக்கு இரவு வேளை உணவுடன் முட்டையும் இலவசமாக வழங்கப்படும் என மாநகராட்சி ஆணையர் சதீஸ் தெரிவித்துள்ளார்.

AMMA RESTAURENT eggs food government Salem
இதையும் படியுங்கள்
Subscribe