சேலம் அன்னதானப்பட்டி மணியனூரைச் சேர்ந்தவர் கிருஷ்ணவேணி (67). சில நாள்களுக்கு முன், அவர் தனது வீடு அருகே நடந்து சென்றபோது மர்ம நபர்கள் சிலர், கத்தியைக் காட்டி மிரட்டி அவர் கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் சங்கிலியைப் பறித்துச் சென்றனர்.

Advertisment

ro

இதுகுறித்து கிருஷ்ணவேணி, அன்னதானப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆய்வாளர் குமார் வழக்குப்பதிவு செய்தார். எஸ்எஸ்ஐகள் அன்பழகன், சம்பத் மற்றும் தலைமைக் காவலர்கள் செந்தில்குமார், விஜயகுமார் ஆகியோர் கொண்ட தனிப்படையினர், சம்பவம் நடந்த இடங்களில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.

இதில், செவ்வாய்ப்பேட்டையைச் சேர்ந்த இளவரசன் (20), திப்பம்பட்டி சங்கர்கணேஷ் என்கிற மன்னார் (21), சிவதாபுரத்தைச் சேர்ந்த யுவராஜ் (20) ஆகியோர்தான் மூதாட்டியிடம் தங்க சங்கிலியைப் பறித்துச் சென்றிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் மூன்று பேரையும் தனிப்படை காவல்துறையினர் பிடித்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 3 பவுன் தங்க சங்கிலியும் பறிமுதல் செய்யப்பட்டது.

Advertisment

கைதான மூவரும் சேலம் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். நீதிமன்ற உத்தரவின்பேரில், அவர்கள் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.