தர்மபுரி மாவட்டம் பொம்மிடியில் கடந்த மே மாதம் 6ம் தேதி தனியார் நிதி நிறுவனத்தின் பூட்டு உடைக்கப்பட்டு, 46 லட்சம் ரூபாய் கொள்ளை அடிக்கப்பட்டது. இதுகுறித்து பொம்மிடி காவல்துறையினர் விசாரித்து வந்தனர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/salem central jail.jpg)
இந்த கொள்ளை சம்பவத்தில் சேலம் மத்திய சிறையில் வார்டனாக பணியாற்றி வந்த, தர்மபுரி சோளக்கொட்டாய் பகுதியைச் சேர்ந்த பெருமாள் (27) என்பவருக்கு நேரடி தொடர்பு இருப்பது தெரிய வந்தது. மேலும், நிதி நிறுவனத்தில் வேலை செய்து வந்த செந்தில் (25), இளவரசன் (25), சேலம் மாவட்டம் பூசாரிப்பட்டியைச் சேர்ந்த சரவணன், அவரின் மனைவி சுமதி, பிரசாந்த், சின்னதம்பி ஆகியோருக்கும் தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து பெருமாள், செந்தில், சுமதி, இளவரசன், சின்னதம்பி, பிரசாந்த் ஆகிய ஆறு பேரை கைது செய்தனர். சரவணன், வேறு ஒரு கொள்ளை வழக்கில் கைதாகி ஏற்கனவே சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.
இந்நிலையில் சிறை வார்டன் பெருமாள் மீது, சிறை கண்காணிப்பாளர் தமிழ்ச்செல்வன் துறை ரீதியான விசாரணை மேற்கொண்டார். அரசு ஊ-ழியர் நடத்தை விதிகளின்படி அரசு ஊழியர் ஒருவர் கைதாகி 48 மணி நேரம் சிறையில் அடைக்கப்பட்டிருந்தால், அவரை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும். அதன்படி, பெருமாள் பணியிடைநீக்கம் (சஸ்பெண்ட்) செய்யப்பட்டுள்ளார்.
Follow Us