bb

Advertisment

தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்க ஈரோடு மாவட்ட போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, கடத்தூர் மற்றும் சித்தோடு போலீசார் தங்களது காவல் எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை மளிகை கடையில் விற்பனைக்காக வைத்திருந்ததாக நம்பியூர் பள்ளத்தூர் காலனியைச் சேர்ந்த தீபா (34), அளுக்குளி, குட்டிமூலைக்காடு பகுதியைச் சேர்ந்த சரோஜாதேவி (62), காலிங்கராயன்பாளையம், பெரியார் நகர் முதல் வீதியைச் சேர்ந்த முருகேசன் (49) ஆகிய 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேலும் அவர்கள் விற்பனைக்கு வைத்திருந்த ரூ. 2,024 மதிப்புள்ள 1,478 கிராம் எடையிலான புகையிலை பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.