Sale of Prohibited Items ... Officials sealed the shop

Advertisment

திருச்சி, துறையூர் பேருந்து நிலையம், கடை வீதி உள்ளிட்ட பகுதிகளில் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை பொருட்கள் அதிகளவு விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் நியமன அலுவலர் டாக்டர் ரமேஷ்பாபு தலைமையில் துறையூர்மற்றும் நொச்சியம் பகுதியில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது.

இந்த சோதனையில், துறையூர் மொத்த வியாபார கடை கழிவறையில் விற்பனைக்காக மறைத்து வைக்கப்பட்டிருந்த தடை செய்யப்பட்ட 5 கிலோ போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதேபோல நொச்சியம் பகுதியில் 1.2 கிலோ போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தொடர்ந்து அந்தக் கடைகளின் உரிமையாளர்கள் மீது வழக்குப் பதிவுசெய்ததோடு, கடைகளைப் பூட்டி சீல் வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.