sale of nutritious eggs; Couple arrested in Trichy!

திருச்சியில், அங்கன் வாடி மையத்தில் சத்துணவுத் திட்டத்துக்குப் பயன்படுத்தப்படும் முட்டைகளை முறைகேடாக விற்பனை செய்த, சமையலர் மற்றும் அவரது கணவரை போலீசார் நேற்று (21.09.2024) கைது செய்தனர்.

திருச்சி எடமலைப்பட்டிபுதூர் பகுதியில் உள்ள ஒரு உணவகத்தில் சத்துணவுத் திட்டத்தில் பயன்படுத்தப்படும் முட்டைகளை மதிப்புக்கூட்டி விற்பனை செய்வதாக உணவு பாதுகாப்புத்துறைக்குப் புகார் வந்தது. இதைத்தொடர்ந்து மாவட்ட நியமன அலுவலர் ஆர். ரமேஷ்பாபு தலைமையிலான உணவு பாதுகாப்பு அதிகாரிகள் குழுவினர் குறிப்பிட்ட உணவகத்தில் நேற்று சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கிருந்த முட்டைகள் சிலவற்றில் தமிழக அரசால் மாணவர்களுக்குச் சத்துணவில் வழங்கப்படும் இலவச முட்டைக்கான முத்திரை இருந்தது தெரியவந்தது.

sale of nutritious eggs; Couple arrested in Trichy!

Advertisment

இது குறித்து விசாரணை நடத்தியதில், அதே பகுதியைச் சேர்ந்தவரும், திருச்சி கே கே நகர் அருகேயுள்ள காந்திநகர் பகுதியில் உள்ள அங்கன்வாடி சத்துணவு மையத்தில் சமையலராக பணியாற்றி வருபவருமான சத்யா (வயது 43) என்பவர் உணவகத்தில் முட்டைகளை விலைக்கு விற்பனை செய்தது தெரியவந்தது. அவரது கணவர் ரகுராம் (வயது 43) முட்டை மொத்த வியாபாரம் செய்து வருவதாகவும், அவர் மூலமாகச் சத்துணவு முட்டைகளை விற்னை செய்ததும் தெரியவந்தது. இதனையடுத்து கணவன் மனைவி இருவரையும் நேற்று கைது செய்து, மேலும் 2 பேர் உள்ளிட்ட4 பேரிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.