sale of methamphetamine; A person was arrested in Madawaram

சென்னை மாதவரம் அருகில் மெத்தபெட்டமைன் விற்ற ஆந்திர இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். கைப்பற்றப்பட்ட போதைப் பொருளின் மதிப்பு ஒரு கோடி ரூபாய் என தெரியவந்துள்ளது.

Advertisment

சென்னையில் மெத்தபெட்டமைன் எனும் போதைப்பொருட்கள் விற்பனை செய்பவர்கள் தொடர்பாக போலீசார் கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில் ஆந்திராவை சேர்ந்த சிலர்சென்னையில் ஏஜெண்டுகளுக்கு போதைப்பொருள் விற்பனை செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சென்னை மாதவரத்தில் அரும்பாக்கம் தனிப்படை போலீசார் நடத்திய சோதனையில் ஆந்திராவைச் சேர்ந்த ஒருவர் ஏஜன்களுக்கு மெத்தபட்டமின் எனும் போதைப்பொருளை மணிப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கொண்டு வந்து விற்பதாக தகவல் கிடைத்தது.

Advertisment

அந்த தகவலின் அடிப்படையில் ஓங்கோலை சேர்ந்த விஸ்வநாதன் என்ற நபரிடம் போலீசார் போதைப்பொருள் வாங்கும் வாடிக்கையாளர் போல் பேசி வரவழைத்து கைது செய்துள்ளனர். கைப்பற்றப்பட்ட மெத்தபெட்டமைன் மதிப்பு ஒரு கோடி ரூபாய் என தகவல் வெளியாகி உள்ளது.