கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் விஷச்சாராயம் குடித்து இதுவரை 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் மேலும் 60க்கும் மேற்பட்டவர்கள் பல்வேறு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புதிதாகப் பொறுப்பேற்ற மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் மாவட்டத்தில் உள்ள சாராய குற்றவாளிகள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
அதுமட்டுமல்லாது தமிழகம் முழுவதும் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் சென்னையில் திருமண மண்டபம் ஒன்றின் அருகே பட்டப்பகலில் காரில் வைத்து சட்டவிரோதமாக கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்கப்படுவதும் அதைப் பொது இடத்தில் வாங்கி சிலர் அருந்துவது தொடர்பான காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.