Sale of illegal liquor; 8 people were arrested

ஈரோடு மாவட்டத்தில் சட்டவிரோதமாக மது விற்பனையை தடுக்க நேற்று போலீசார் ரோந்து மேற்கொண்டனர். இதில், சட்டவிரோதமாக மதுபாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்ததாக ஈரோடு சூரம்பட்டி நால்ரோட்டில் இதயத்துல்லா (55), ஈரோடு ரயில்வே ஸ்டேஷன் எதிர்புறத்தில் சுவர்ணலிங்கம்(47), கோபி மேவாணியில் மாரியப்பன் என்ற குமரேசன்(32), திங்களூரில் கருப்பன்(63), பெருந்துறை பவானி சாலையில் கண்ணன்(48), அரச்சலூர் ராக்கம்மா புதூரில் விஜய்(25), சென்னிமலை காங்கேயம் சாலையில் துரைசாமி(63), கருங்கல்பாளையம் பவானி சாலையில் அரவிந்த்(23) ஆகிய 8 பேரை கைது செய்து.

Advertisment

அவர்களிடம் இருந்த 61 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும், இடையன் குட்டை டாஸ்மாக் கடை அருகே பெட்டிக் கடையில் மது அருந்த அனுமதித்ததாக அருள்பிரபு(31), காஞ்சிக்கோவில் தங்கமேட்டில் வறுவல் கடையில் மது அருந்த அனுமதித்ததாக கருப்புசாமி (52) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.