சட்ட விரோத மது விற்பனையைத்தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, ஈரோடு வீரப்பன் சத்திரம், பெருந்துறை மற்றும் கடத்தூர் போலீசார், தங்கள் காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அரசு மதுபானத்தை சட்ட விரோதமாகப் பதுக்கி வைத்து, அதிக விலைக்கு விற்பனை செய்து வந்த, ஈரோடு, ராசாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த செந்தில் (50), பெருந்துறை, சென்னிமலை ரோடு, விக்னேஷ் நகரைச் சேர்ந்த செந்தில் (37), கடத்தூர், மூலவாய்க்காலைச் சேர்ந்த தர்மலிங்கம் (40) மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து 30 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.