Advertisment

டீக்கடையில் குட்கா விற்பனை; 3 பேர் கைது; 26 கிலோ பறிமுதல்

Sale of Gutka at Tea Shop; 3 arrested; 26 kg seized

தமிழக அரசு குட்கா உள்ளிட்ட புகையிலைமற்றும் குட்கா பொருட்களுக்கு தடை விதித்துள்ளதோடு பள்ளி மற்றும் கல்லூரி உள்ள பகுதியில் புகையிலை பொருட்களை விற்பனை செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஈரோடு மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என்பதை கண்காணிக்கும் வகையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர் உத்தரவின் பேரில் மாவட்ட போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisment

அவ்வபோது ரகசிய தகவலின் பெயரில் பெட்டிக்கடை, மளிகைக் கடை, டீக்கடை, பேக்கரி கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டு புகையிலைப் பொருட்களை பதுக்கி வைத்திருப்பவர்களை கைது செய்து வருகின்றனர்.

Advertisment

இந்நிலையில், ஈரோடு மாவட்டம் பெருந்துறை வாய்க்கால் மேடு பகுதியில் பல்வேறு கல்லூரிகள் செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் ஆயிரக்கணக்கான மாணவ- மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த கல்லூரிகள் அமைந்துள்ள பகுதியின் அருகே தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள்விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் பெயரில், பெருந்துறை போலீசார் ரகசிய விசாரணை மேற்கொண்டனர். அப்போது வாய்க்கால்மேடு பகுதியில் உள்ள ஒரு டீக்கடையில் சோதனை செய்தபோது, விற்பனைக்கு பதுக்கி வைக்கப்பட்டு இருந்த26 கிலோ குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

குட்கா பொருட்களை விற்பனை செய்து வந்த பெருந்துறை பிச்சாண்டம்பாளையம் சேர்ந்த பாலசுப்பிரமணி மற்றும் ஈரோடு ரங்கம்பாளையம் பகுதியை சேர்ந்த எட்வர்ட் அவரது அண்ணன் மகன் அருண்குமார் ஆகிய மூன்று பேரை கைது செய்து பெருந்துறை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், எட்வரிடம் இருந்து ரூ.2 லட்சம் ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

gutka Erode police
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe