
அண்மையில் குட்கா, கஞ்சா கடத்தல், பதுக்கல் சங்கிலியை ஒழிக்க 'ஆப்ரேசன் கஞ்சா 2.0' என்ற அந்த திட்டம் தொடங்கப்பட்டு அதனடிப்படையில் தமிழகம் முழுவதும் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவோர் கைது செய்யப்பட்டனர். இப்படி ஒருபுறம் அரசின் நடவடிக்கைகள் தொடர்ந்தாலும் கஞ்சா விற்பனை என்பது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்தநிலையில் காஞ்சிபுரத்தில் சிறுவர்கள் மூவர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு கைதான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. காஞ்சிபுரம் சுற்றுவட்டாரப் பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் நடத்திய சோதனையில் சிறுவர்கள் மற்றும்இளைஞர் உட்பட மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து ஒரு கிலோ 300 கிராம் கஞ்சா, 18 லட்ச ரூபாய் மதிப்பிலான இரண்டு இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
Follow Us