Advertisment

சம்பளம் கட் - தலைமைச் செயலாளர் உத்தரவால் அரசு ஊழியர்கள் கொந்தளிப்பு

Chief Secretary

Advertisment

8வது ஊதியக் குழு பரிந்துரைகளை அமல்படுத்துவது, பழைய ஓய்வூதிய முறையையே தொடர வேண்டும் உள்ளிட்ட 3 கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ பல கட்ட போராட்டங்களை நடத்தி வருகிறது.

மேலும் கடந்த மாதம் நடந்த ஜாக்டோ ஜியோ உயர்மட்ட குழுவில் அக்டோபர் 4ஆம் தேதி ஒரு நாள் ஒட்டுமொத்த தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டம் நடத்துவது என முடிவு எடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தற்செயல் விடுப்பு குறித்து அரசு ஊழியர்களுக்கு ஜாக்டோ ஜியோவில் உள்ள சங்கங்கள் அழைப்பு விடுத்து வருகின்றன.

இந்த நிலையில் பல்வேறு துறை செயலாளர்கள் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

Advertisment

அதில், ஒட்டுமொத்த தற்செயல் விடுப்பு அரசு அலுவலகப் பணிகளை பாதிக்கும் என்பதால் அனுமதியின்றி எடுக்கப்படும் விடுப்புக்கு ஊதியம் வழங்கப்படாது என உத்தரவிட்டுள்ளார். மேலும் அன்றைய தினம் அனைத்து அலுவலக வருகைப் பதிவு நிலையை காலை 10.30 மணிக்குள், கிராம, தாலுகா, மாவட்டங்களில் உள்ள அதிகாரிகள் சேகரிக்க வேண்டும். பின்னர் அதை தலைமை செயலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். எனினும் உரிய காரணங்கள் இருப்பின் உண்மைத் தன்மையை அறிந்து விடுப்பு அளிக்கலாம் என்றும் சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தலைமைச் செயலாளரின் இந்த உத்தரவு அரசு ஊழியர்கள் சங்கங்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

govt staff Velmurugan struggle
இதையும் படியுங்கள்
Subscribe