Salary cut if you protest - warning to government employees

Advertisment

அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால் சம்பளம் கிடையாது என தமிழக அரசு ஊழியர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திஅரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் இன்று ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டம் அறிவித்திருந்தது. இந்த நிலையில் அரசு ஊழியர்களுக்கு தமிழக அரசு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. அதில், 'மருத்துவ விடுப்பை தவிர சாதாரண விடுப்போ அல்லது மற்ற விடுப்போ அரசு ஊழியர்கள் எடுக்கக் கூடாது; காலை 10:15 மணிக்குள் பணிக்கு வராதவர்களின் விவரங்களை சேகரிக்க வேண்டும்; பணிக்கு வராமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் ஊழியர்களுக்கு சம்பளம் கிடையாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.