சென்னை சேப்பாக்கத்தில் மக்கள் பாதை அமைப்பின் தலைவர் நாகல்சாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்பொழுது பேசிய அவர்,
"மக்கள் பாதை அமைப்பின் வழிகாட்டுதல் பொறுப்பிலிருந்து அவரை நீக்க முடிவு செய்துள்ளோம். முக்கியமுடிவுகளை எடுக்கும்பொழுது சகாயம் தனக்குப் பிடித்தவர்களுடன் மட்டும் ஆலோசனை நடத்தினார்.மக்கள் பாதை அமைப்பைசகாயம்தான் நடத்தினார். ஆனால், தற்பொழுது அவர் தேவையில்லை என்ற முடிவுக்கு வந்துவிட்டோம். மக்கள் பாதை அமைப்பின் அடையாளங்களை சகாயம்எங்கும் இனி பயன்படுத்தக்கூடாது" என்றார்.