Advertisment

கலைஞர் நேற்றை விட இன்று நல்ல உடல்நிலையில் உள்ளதாக கூறினார்கள்: நல்லகண்ணு

nalla

Advertisment

திமுக தலைவர் கலைஞர் நேற்றை விட இன்று நல்ல உடல்நிலையில் உள்ளதாக உறவினர்கள் சொன்னார்கள் என கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு தெரிவித்துள்ளார்.

திமுக தலைவர் கலைஞரின் உடல்நிலையில் நலிவு ஏற்பட்டுள்ளதை அடுத்து அனைத்துக்கட்சி தலைவர்களும் நேரில் வந்து நலம் விசாரித்து செல்கின்றனர். முன்னதாக நேற்று துணைமுதல்வர், ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் ஜெயக்குமார், வேலுமணி, தங்கமணி உள்ளிட்டவர்கள் நலம் விசாரித்து சென்றனர்.

இதைத்தொடர்ந்து, நேற்று இரவே விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், மக்கள் நீதி மைய்யம் தலைவர் கமல்ஹாசன், சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார், பத்தரிகையாளர்கள் நக்கீரன் கோபால், கோவி.லெனின் உட்பட பலர் கோபாலபுரம் இல்லம் வருகை தந்து நலம் விசாரித்தனர்.

Advertisment

தொடர்ந்து இன்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், இயக்குநர் பாரதிராஜா, நடிகர்கள் ராதாரவி, எஸ்.வி.சேகர் உள்ளிட்டோர் நேரில் வந்து நலம் விசாரித்தனர்.

பிரதமர் மோடி, ஜனாதிபதி ராம்நாத், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி உள்ளிட்டோர் தொலைபேசி மூலம் ஸ்டாலின் மற்றும் கனிமொழியிடம் தொடர்புகொண்டு கலைஞரின் நலம் விசாரித்தனர்.

nalla

இந்நிலையில், கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு இன்று மாலை கோபாலபுரம் வருகை தந்தார். அப்போது திரும்பி செல்லும் போது செய்தியாளர்களை சந்தித்த அவர், கலைஞர் நேற்றை விட இன்று நல்ல உடல்நிலையில் உள்ளதாக உறவினர்கள் சொன்னார்கள். அவர் ஆரோக்கியமாக மீண்டு வந்து பணியாற்ற வேண்டும் என விரும்புகிறேன் என கூறினார்.

kalaignar nallakannu
இதையும் படியுங்கள்
Subscribe