Advertisment

அரசுப் பணியில் இருந்து சகாயம் ஐ.ஏ.எஸ். விடுவிப்பு!

 Sagayam IAS released from government service

விருப்ப ஓய்வு கடிதம் அளித்திருந்த நிலையில் அரசுப் பணியில் இருந்து சகாயம் ஐ.ஏ.எஸ். விடுவிக்கப்பட்டார்.

Advertisment

நாமக்கல் மற்றும் மதுரை மாவட்டங்களில்ஆட்சியராகப் பணியாற்றியவர் சகாயம் ஐ.ஏ.எஸ். இவர் மதுரையில் ஆட்சியராக இருந்தபோது கிரானைட் குவாரி விவகாரத்தை வெளிக்கொண்டு வந்தார். கடந்த 7 ஆண்டுகளாக தமிழக அறிவியல் நகர துணைத் தலைவராக பணியாற்றி வந்த சகாயம் ஐ.ஏ.எஸ்., தான் விருப்ப ஓய்வில் செல்வதாக அரசுக்கு அக்டோபர் 2-ஆம் தேதி கடிதம் அளித்திருந்தார். இந்நிலையில் கடிதம் அளித்து மூன்று மாதங்கள் முடிந்ததால் சகாயம் ஐ.ஏ.எஸ். அரசுப் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

Advertisment

58 வயதை கடந்தசகாயம் ஐ.ஏ.எஸ். ஓய்வு பெற இன்னும் ஒன்றரை ஆண்டுகள் உள்ள நிலையில் விருப்ப ஓய்வில் செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

government service sagayam
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe